ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது ‎‎ மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் ‎கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்!  என்று எங்களிடம் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)‎; நூல்: புகாரி 1254, 1263‎

கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்

இவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் விரும்பினால் ‎இதை விட அதிகமாக இலந்தை இலை கலந்த தண்ணீரால் ‎கழுவுங்கள். கடைசியில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் ‎என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)‎; நூல்: புகாரி 1253, 1254, 1259, 1261, 1263‎

இறந்தவரின் உடல் நன்கு சுத்தமாக வேண்டும் என்பதற்காக ‎சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இதை ஆதாரமாகக் ‎கொள்ளலாம்.‎

குளிப்பாட்டும் போது பெண்களின் சடைகளைப் பிரித்து விடுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைக் குளிப்பாட்டிய ‎போது அவரது தலையில் போட்டிருந்த மூன்று சடைகளைப் ‎பிரித்து, குளிப்பாட்டிய பின் மூன்று சடைகளைப் போட்டனர்.‎

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)‎; நூல்: புகாரி 1260, 1254, 1259, 1262, 1263‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed