இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்

புனிதமிக்க ரமலான் பண்டிகை நம்மை விட்டு கடந்து விட்ட நிலையில் இப்ராஹீம்நபியவர்களின் தியாகத்தை நினைவூட்டும் பக்ரீத் பண்டிகை நம்மை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.

இது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பே அது தொடர்பானவிஷயங்களை வெள்ளி மேடைகளில் மக்களுக்கு விளக்கும் முறை நம்மிடையேகாணப்படுகிறது. இது ஒரு நல்ல வழமை என்றாலும் இத்தருணங்களில் மார்க்கத்தில்இல்லாத கட்டுக்கதைகளும் புருடாக் களும் கட்டவிழ்த்து விடப்படுவது மிகவும்வேதனைக்குரியது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்பை நம் இஸ்லாமிய சமுதாயம் நன்கு அறிந்தேவைத்திருக்கிறது. திருமறைக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வாய்மைக்கருத்துக்களும் அவர்களின் சிறப்பை சிகரத்தின் உச்சிக்கே உயர்த்தி விடுகிறன.

இவ்விரண்டில் சொல்லப்பட்டக் கருத்துக்களே நம் ஈமானிற்கு உகந்ததாகவும் நம்நடவடிக்கைகளைச் சீர்திருத்திக் கொள்வதற்குப் போதுமானதாகவும் உள்ளது. ஆனால்மார்க்கத்தின் அடிப்படையில் கோட்டை விட்ட அறிஞர்கள் நபி இப்ராஹீம் (அலை)அவர்களின் தியாகத்தை மிகைப்படுத்தி குர்ஆன் ஹதீஸில் இல்லாததகவல்களைக்கூறியுள்ளார்கள்.

தனக்குப் பிடித்தமான ஒரு நிகழ்வை மனிதன் வர்ணிக்கும் போது அதனுடையயதார்த்தத்தைக் கூறாமல் இவனுடைய கற்பனையில் உதிப்பவற்றையெல்லாம்கூறுவான். இந்த அடிப்படையில் தான் மகான்கள் அவ்லியாக்களின் கட்டுக் கதைகள்எல்லாம் பரவின. அக்கதைகளால் வழி கெடுத்தவர்களும் வழிகெட்டவர்களும் பலர்.

இந்தப் படுமோசமான செயல் இப்ராஹீம் நபி விஷயத்திலும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதைச் சாதாரணமான குற்றமாக எடுக்க இயலாது. இக்கருத்துக்கள்மார்க்கத்தின் பெயரால் பரப்பப் படுவதால் மறுமை நாள் வரை நிலைத்து நிற்கின்றதாகிவிடும். எனவே இந்த புருடாக்களைப் பற்றி நம் சமுதாயம்தெரிந்து கொள்வது மிக மிகஅவசியம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்காக முகம்குப்புறக் கிடத்தி விட்டு அறுக்க முற்பட்டார்கள். ஆனால் அவர்கள் கையிலிருந்த கூர்மைவாய்ந்த கத்தி இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுக்கவில்லை. இதனால் கோபமடைந்தஇப்ராஹீம் நபியவர்கள் கத்தியைத் தூக்கி பாறையில் எறிந்தார்கள். உடனே பாறை இரண்டாகப் பிளந்தது.

இவ்வாறு அந்தப் புருடா நீண்டு கொண்டு செல்கிறது. சில செய்திகள் பின்வருமாறும்புனையப்பட்டுள்ளன.

இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்விற்கு அறுத்துப் பலியிடுவதாகஇப்ராஹீம்(அலை) அவர்கள் கூறிய போது இஸ்மாயீல் (அலை) சொன்னார்களாம். “என் தந்தையே!நீங்கள் அறுக்கும்போது நான் குலுங்காமல் இருப்பதற்காக நன்கு என்னை கயிற்றால்கட்டிக் கொள்ளுங்கள். இரத்தம் எதுவும் என் ஆடையில் படாதவாறு அதைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதை என் தாய் சாரா பார்க்கும் போது அது அவர்களுக்குக்கவலையூட்டும். என்னை நீங்கள் அறுக்கும் போது முகத்தைப் பூமியை நோக்கிவையுங்கள். ஏனென்றால் என் முகத்தைப் பார்த்தால் நீங்கள் இரக்கப்பட்டு என்னை விட்டுவிடுவீர்கள். அறுத்த பின்பு என் தாய் சாராவுக்கு நான் சலாம் சொன்னதாகக்கூறிவிடுங்கள்” என்று இஸ்மாயீல் (அலை) அவர்கள் சொன்னார்களாம்.

இப்ராஹீம் நபியும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அழுதார்களாம். பின்பு இப்ராஹீம்(அலை) அவர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்த போது கழுத்து அறுபடவில்லையாம்.ஏனென்றால்அல்லாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களின் கழுத்தில் செம்பினால் ஆனதகட்டை ஏற்படுத்தி விட்டான் என்று கதை சொல்கிறார்கள்.

இந்நிகழ்வுகள் எல்லாம் உண்மையாகஇருந்தால் அதை அல்லாஹ் திருக்குர்ஆனில்தெளிவு படுத்தியிருப்பான்.

இவ்விருவரின் தியாகத்தைத் தெரிந்து கொண்டு, நாம் படிப்பினை பெற வேண்டும்என்பதற்காக அந்த வரலாற்றை நமக்கு திருக்குர்ஆனில் சொல்கிறான்.

அவருக்கு சகிப்புத் தன்மை மிக்கஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன்உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான்உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக்கூறு” என்று கேட்டார்.

“என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ்நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்குஇவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம்.

இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறேகூலிவழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

(அல்குர்ஆன் 37:101-111)

மேற்கூறப்பட்ட செய்திகள் உண்மை என்றிருந்தால் அதை அல்லாஹ் இந்தஇடத்தில்குறிப்பிட்டிருப்பான்.ஏனென்றால் இங்கு அவர்களுடைய சிறப்பைப் பற்றிக் கூறுகிறான்.அதைக் கூறுவதற்கு தகுதியான இடம் கூட இது தான். இதிலிருந்து இந்தச்செய்திகள்உண்மையானவை அல்ல என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

இப்ராஹீம் நபியின் தியாகத்தை எடுத்துக் கூறும் இந்த வசனத்தில், “இருவரும்கீழ்ப்படிந்து மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ‘இப்ராஹீமே! அக்கனவை நீர்உண்மைபடுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்’என்று அவரை அழைத்துக் கூறினோம்” எனக் கூறப்படுகிறது.

“கிடத்திய போது கூப்பிட்டோம்’ என்று இறைவன் கூறுவது இப்ராஹீம் (அலை) அவர்கள்அறுப்பதற்கு ஆயத்தமாகிய போதே இறைவன் வேண்டாம் எனக் கூறி விட்டான் என்பதைதெளிவாக்குகிறது. இந்த வசனத்தை நன்கு கவனித்தாலே இவர்கள் கூறுவது அனைத்தும்கட்டுக் கதைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இதுபோன்று ஏராளமான பொய்கள் இப்ராஹீம் நபியின் சிறப்பையும் இஸ்மாயீல் (அலை)அவர்களின் அருமையையும் உயர்த்தும் நோக்கில் புனையப்பட்டுள்ளன. இவற்றில் சிலநம்முடைய கவனத்திற்கு வந்துள்ளது. பல இன்னும் நம்மை அடையாமல் இருக்கலாம்.

எனவே பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொண்டால் அதைஅளவுகோலாகப் பயன்படுத்தி எளிதில் இக்கதைளை விரட்டிவிடலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை ஒன்று அவர்கள்காலத்தில் வாழ்ந்த ஒருவராவது கூற வேண்டும். இல்லாவிட்டால் அல்லாஹ்தன்னுடைய நபிக்கு வஹியின் மூலம் இதைத் தெரிவித்திருக்க வேண்டும். இந்தஇரண்டையும் விடுத்து மூன்றாவது ஒரு வழியில் அவர்கள் பற்றிய செய்திகளை நம்மால்அறிந்து கொள்ள இயலாது.

இப்ராஹீம் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் தற்போது இல்லை.அல்லாஹ்வோ, அவனது தூதரோ இவர்கள் கூறுவது போல விளக்கியுள்ளார்களா?என்றால் அதுவும் இல்லை. இந்த இரண்டு அளவுகோலும் இல்லாத போது எப்படிஇவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்?

இப்ராஹீம் நபியின் இந்த வரலாறு குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும்கூறியிருக்கின்ற செய்திகளேஒருவர் படிப்பினை பெறுவதற்குப்போதுமானதாகும்.

உண்மையைச் சொல்வது முக்கியமல்ல.மாறாக அந்த உண்மையுடன் பொய்யானஎந்தக்கருத்துக்களையும் கலக்காமல் தூய்மையான முறையில், சரியானதகவல்களைமாத்திரம் எடுத்துரைக்க வேண்டும். இதைப் புரிந்து செயலாற்றும் படி பின்வரும்வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அறிந்துகொண்டே சரியானதை தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையைமறைக்காதீர்கள்.

(அல்குர்ஆன் 2:42)

இன்றைக்கு இஸ்லாம் மாற்று மதத்தினரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கு இதுபோன்ற ஆதாரமில்லாத தகவல்களும் காரணமாக இருக்கின்றன. அடிப்படை இல்லாமல்பரப்பப்படும் கருத்துக்கள் பலரால் அதிகவிமர்சனத்திற்கு ஆளாகின்றது. மாற்று மதத்தார்நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் ஆதாரமற்றஇந்த விஷயங்களைக் குறித்தேபெரும்பாலும் இருக்கின்றது.

மார்க்கத்தில் இல்லாத கருத்தைக்கூறுவதற்கு எவருக்கும் எள்ளளவும் அனுமதிகிடையாது என்பதைப் பின்வரும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகவிளக்கியுள்ளார்கள்.

“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல்உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கை பக்கமாகச்சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “யா அல்லாஹ்! நான் எனது முகத்தைஉன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப்பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும்உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீஇறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான்நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டுஉறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன்.அப்போது “நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக”உனது ரசூலையும் நம்பினேன்’ என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை. நீ அனுப்பிய உனது நபியைநம்பினேன் என்று கூறுவீராக” என எனக்குத்திருத்திக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 247

இந்த ஹதீஸில், நபிய்யிக்க என்பதற்குப் பதிலாக ரசூலிக்க என்றுநபித்தோழர் கூறிவிட்டார். இரண்டும் ஒரே பொருளைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்)அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

ஒரே அர்த்தத்தைக் கொண்ட வார்த்தையாக இருந்தாலும் பெருமானார் அவர்கள்சொல்லிக் கொடுத்ததை நாம் சொல்ல வேண்டுமே தவிர நம் இஷ்டத்திற்குக் கூறஇயலாது. மார்க்கம் தொடர்பாக எந்தச் செய்தி நமக்குக் கிடைத்தாலும் அதற்கு ஆதாரம்இருக்கின்றதா? என்று சோதித்தறிந்து ஏற்க வேண்டும்.

காதில் விழுபவை, கண்ணில் படுபவைஇவற்றையெல்லாம் பரப்பினால், “என் மீது பொய்சொல்பவர் நரகத்தில் தனது இருப்பிடத்தை ஆக்கிக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்)அவர்கள் சொன்னார்களே அந்த எச்சரிக்கைக்குத் தகுதியானவர்களாக நாம் ஆகிவிடுவோம். பெருமானாரின் மீதுபொய் சொன்ன குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிவரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேட்டவற்றையெல்லாம்ஒருவன் சொல்வது அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி)

நூல்: முஸ்லிம் 6

இப்ராஹீம் நபி குறித்த இந்தக் கட்டுக் கதைகளை நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லைஎன்பது சில அறிஞர்களுக்குத் தெரியும். ஆனாலும்கருத்து நன்றாக இருப்பதால் சொல்லிவருவார்கள். இவ்வாறு தெரிந்த பிறகும் அதை விட்டு விலகாமல் சொல்லிவருபவர்களும் பெருமானாரின் மீது அபாண்டத்தைக் கூறிய குற்றத்திற்குத்தகுதியாவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்யென்று கருதுவதற்குச்சாத்தியமான ஒரு ஹதீஸைஎன்னிடமிருந்து யார் அறிவிப்பாரோ அவர் பொய்யராவார்.

அறிவிப்பவர்: முஹீரா பின் ஷுஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் 1

எனவே இறைத்தூதர்கள் மீது இது போன்ற இல்லாத கதைகளையும் கப்ஸாக்களையும்கூறுவதை விட்டு நாம் விலக வேண்டும். மார்க்கச் சொற்பொழிவுகள் என்ற பெயரில்ஆதாரமில்லாத கதைகளைக் கூறும் இந்தச் சபைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed