*அல்லாஹ் அனைத்தையும் கண்காணிக்கின்றான்*

————————————————————————

*உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.*

இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே *நட்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள்*.

இவர்கள் காத்திருந்தால் நரகமே இவர்களின் தங்குமிடமாகும். *இவர்கள் (மீண்டும் உலகுக்கு அனுப்பி) வணக்கங்கள் செய்யும் வாய்ப்பை இவர்கள் கோரினால் அந்தச் சிரமம் அவர்களுக்கு அளிக்கப்படாது*

அல்குர்ஆன் *41:22-24*

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் *குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்* அல்லது *ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்* (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர்.

அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. உள்ளங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், *நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?* என்று கேட்டார்.

மற்றொருவர், *நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை* என்று பதிலளித்தார்.

(அவர்களில்) இன்னும் ஒருவர், *நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்* என்று கூறினார்.

அப்போது அல்லாஹ், *உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை* எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.

நூல்: புகாரி (4817, 4816)

————————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed