*செய்யாததை சொல்பவனுக்குரிய தண்டனை*

நாம் ஐவேளை கடமையான தொழுகைகளை தொழுவதில்லை.

ஆனால் பிறரை தொழுமாறு கட்டளையிடுவோம், அல்லது *தீமையான காரியங்களில் மூழ்கியிருப்போம். ஆனால் தீமையை விட்டு பிறரை தடுப்போம்.* இதுப் போன்ற செயல்களை செய்பவர் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுவார். அதாவது நன்மையை ஏவிக்கொண்டு தாம்

*அதைச் செய்யாமலும், தீமையைத் தடுத்துக்கொண்டு தாமே அதைச் செய்துகொண்டும் இருப்பருக்கு மறுமையில் கழுதை செக்கை இழுத்து* வருவதைப் போன்று நரகத்தில் சுற்றிவருவார்.

*நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.*

அல்குர்ஆன் 61:2,3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார்* .

அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, *இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?* என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், *நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்* ;

ஆனால், *அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்* என்று கூறுவார்.

ஏகத்துவம்

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed