*அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….*

ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். *தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர*! அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள் என்று கூறப்படும்.

நூல்: முஸ்லிம் 5014, 4653)

நம் சகோதர, *சகோதரர்களிடம் சண்டையிட்டுக் கொள்வதால் நம்முடைய அமல்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படாது என்றால்*,

*சமாதானமும் விட்டுக் கொடுக்கும் பண்பும் எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்.*

மனிதர்கள் பல பண்புகளை உடையவர்கள். எனவே பல வகையில் நமக்குத் தொந்தரவுகளைத் தரலாம். அவற்றையெல்லாம் *நாம் மன்னித்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்*.

எனவே தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

*பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக*!

(அல்குர்ஆன் 7:199)

*தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது*. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன் 2:263)

*தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்*.

(அல்குர்ஆன் 4:114)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *