*அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓*

*மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன்* என்று கூறிய அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது, *தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும்* என்றும், அவ்வாறு செய்யும் போது தான் *தன்னுடைய மன்னிப்பு உங்களுக்கு உண்டு* என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் அன்பு மகளும், நபிகளாரின் அன்பு மனைவியுமான *அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிரிகள் வைத்தனர்*.

அவர்களின் வலையில் சில நபித்தோழர்களும் விழுந்தனர். *இந்தக் குற்றச்சாட்டுகள் நபிகளாரையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் கடுமையாகப் பாதித்தது.*

நூல் :புகாரி 4140

இந்நிலையில் *அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கி, பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.*

அப்போது இந்த அவதூறு பரப்பியவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் உதவி பெற்று வந்தவருமான *மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன்* என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தார்கள்.

இதைக் கண்டித்துப் பின்வருமாறு அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கினான்.

*உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்* என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். *மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா*? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 24:22)

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் *அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்று கூறி விட்டு மிஸ்தஹ் என்ற நபித்தோழருக்குப் பழையபடி உதவிகளை செய்யத் தொடங்கினார்கள்*.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed