*அமல்களை அழிக்கும் முகஸ்துதி*

————————————————-

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தின் தகவல் பரிமாற்ற சாதனங்களில் ஒன்றாக விளங்குவது *ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், இன்ஸ்டோக்ராம்* போன்ற சமூக வலைத்தளங்கள்.

*ஒரு தகவலை ஒரு நொடியில் உலகின் மூலை முடுக்கிற்கு எடுத்துச் செல்லும் இந்த வலைச் செயலிகளை வைத்து ஏகத்துவப் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.*

இத்தகைய அழைப்பு பணி காரியத்தைக் கூட முகஸ்துதிக்காக சிலர் முன்னெடுத்துச் செல்லும் நடைமுறையைப் பார்க்க முடிகிறது.

மார்க்கம் தொடர்பான ஒரு பதிவைப் பதிந்து விட்டு,

*அதை எத்தனை நபர்கள் லைக் செய்கின்றனர்❓*

*எத்தனை நபர்கள் பகிர்கின்றார்கள்,❓*

*எத்தனை பேர் நம்மைப் பாராட்டுகின்றனர்❓*

என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், சிலர் தன்னைப் பாராட்ட வேண்டும், *முகநூல் போராளி* என்று தன்னை மெச்ச வேண்டும், தான் பதியும் *மார்க்கப் பதிவின் மூலம் தனது அறிவைப் புகழ வேண்டும்* என்பதற்காக சமூக வலைத்தளங்களில் உலா வரக்கூடிய நபர்களை நாம் பார்க்கின்றோம்.

இப்படி அளவில்லா நன்மையைப் பெற்றுத் தரும் *தஃவாவை முகஸ்துதிக்காகவும், தன் முகம் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவும் முன்னெடுத்துச் சென்றால் அது நமது மறுமை இலக்கை அழித்து ஒழித்துவிடும்.*

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : *நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி* என்று கூறினார்கள்.

நூல் : *அஹ்மத் (22528)*

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :   

*பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.*

நூல் : *அஹ்மத் (16517)*

——————————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed