இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்..
—————————————
- ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்
- திருக்குர்ஆனை ஓதுவார்கள்
- சோதனையின் போது தளரமாட்டார்கள்
- ஏமாற மாட்டார்கள்
- அனைத்திலும் நன்மையைப் பெறுவார்கள்
- நற்குணம் நிறைந்திருக்கும்
- இறைநம்பிக்கையாளனின் சகோதரர்கள்
- சபிக்க மாட்டார், குறைகூற, கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்
- பயனளிப்பதையே ஆசைப்படுவான்
ஆதாரங்கள்:-
———————-
1) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி),
நூல் : புகாரி (481)
——————————————-
2) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி),
நூல் : புகாரி (5059)
———————————————-
3) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி (5643)
—————————————-
4) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (6133)
————————————————
5) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.
அறிவிப்பவர் : ஸுஹைப் (ரலி),
நூல் :முஸ்லிம் (5726)
—————————————————
6) (இறைநம்பிக்கையாளனின்) தாரசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி),
நூல்: அபூதாவூத் (4166)
இறைநம்பிக்கையில் முழுமை பெற்றவர் அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் அவர்கள் மனைவியிடம் சிறந்தவராக இருப்பவரே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ (1082)
———————————————
7) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். ஹதீஸின் சுருக்கம்
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் :முஸ்லிம் (2765)
————————————-
8) குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),
நூல்: திர்மிதீ (1900)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் (மறுமையில் நன்மைகளை) பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.
உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.
மாறாக, அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான் என்று சொல்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் :முஸ்லிம் (5178)
உண்மையான இறை நம்பிக்கையாளராக வாழ்ந்து, இது போன்ற நன்மையான செயல்களை செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
ஏகத்துவம்