ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா❓

பொதுவாக தொழுகைகளை அதற்கான நேரம் வருவதற்கு முன் தொழக் கூடாது என்றாலும் தொழுகை நேரம் வருவதற்கு முன் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் நேரம் வருவதற்கு முன்னர் தொழ அனுமதியுள்ளது.

பயண நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைகறைப் பொழுது வருவதற்கு முன்பே இருட்டில் தொழுதுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் மீது (ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு) போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின் போது) கைபருக்கு அருகில் (அதன் புறநகரில்) நாங்கள் (கடைசி இரவின்) இருட்டிலேயே  வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள்.
நூல் : புகாரி 371

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும், இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது.

மற்றொன்று: அன்றைய (மறு) நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது.
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய நேரத்திற்கு முன் இருட்டிலேயே தொழுதது”
என இடம்பெற்றுள்ளது.

நூல் : முஸ்லிம் 2479

எனவே ஃபஜர் தொழுகையைச் சற்று முன்னதாகவே இருளில் தொழுவதற்கு அனுமதியுள்ளது. குறிப்பாக பயணத்தில் இவ்வாறு தொழுதால் அதில் தவறேதுமில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *