RIP- Rest In Peace (பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்) கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா???
RIP என்று கூறுவது கிருஸ்துவர்களின் வழக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
3512 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋُﺜْﻤَﺎﻥُ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺷَﻴْﺒَﺔَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺍﻟﻨَّﻀْﺮِ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦُ ﺛَﺎﺑِﺖٍ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﺴَّﺎﻥُ ﺑْﻦُ ﻋَﻄِﻴَّﺔَ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻣُﻨِﻴﺐٍ ﺍﻟْﺠُﺮَﺷِﻲِّ ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋُﻤَﺮَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣَﻦْ ﺗَﺸَﺒَّﻪَ ﺑِﻘَﻮْﻡٍ ﻓَﻬُﻮَ ﻣِﻨْﻬُﻢْ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ
ஒரு மனிதன் இறந்தால் அவன் அமைதியாக உறங்குகிறானா இல்லையா என்பதை அல்லாஹு ஒருவனே அறிந்தவன்.
ஒரு முஸ்லிமிற்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவன் என்ன கூறவேண்டும் என்பதை குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
2:155 ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
மேற்கூறிய வசனத்தில் மனிதனுக்கு பலவிதங்களில் சோதனைகளை அல்லாஹ் தருகின்றான்.
الَّذِيۡنَ اِذَآ اَصَابَتۡهُمۡ مُّصِيۡبَةٌ ۙ قَالُوۡٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيۡهِ رٰجِعُوۡنَؕ ﴿۱۵۶﴾
2:156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.
ஆனால் எத்தைகைய சோதனைகளை எதிர்கொண்டாலும் ஒரு முஸ்லிமின் வார்த்தை “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்) என்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக மார்க்கத்திற்கு முரணான எந்த வார்த்தைகளையும் கூறுவது கூடாது.
எனவே பிற மதத்தின் வார்த்தைகளையோ , மார்க்கத்திற்கு முரணான வார்த்தைகளையோப் பயன்படுத்தாமல் நம்முடைய மார்க்கம் நமக்கு கற்றுத்தந்தபடி கூறுவதுதான் இறையச்சத்திற்கு நெருக்கமான செயலாக இருக்கு முடியும்