Category: Quran & Hadith Images

ஸலவாத்து- 01

இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்…

அத்தஹியாத்து துஆ 02

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயம் ஒன்றைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்கு (பின்வருமாறு) கற்றுத்தந்தார்கள்:அத்தஹிய்யாத்துல் முபாரக்காத்துஸ் ஸலவாத்துத் தய்யிபாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு,…

அத்தஹிய்யாத் துஆ 01

அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும்,…

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓத வேண்டிய துஆ

رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي ஸஜ்தாக்களுக்கிடையே, ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு) Rabbighfir li, Rabbighfir li (O Lord forgive me, O Lord forgive me) Sunan…

ருகூவிலிருந்து எழும் போது ஓதும் துஆ

ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الحَمْدُ ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து…

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார்

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்ளவார்கள். அவர்கள் யாரெனில், ஒதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள், தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு…

ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப்பற்றை நாசாமாக்கி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் (வணக்க வழிபாடுகளில்) அதிக ஈடுபாடு காட்டல். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளான் மாதத்தின்) இறுதிப்பத்து (நாட்கள்) துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாட்டின் மூலம்) இரவுகளுக்கு உயிரூட்டுவார்கள்; (வழிபாட்டில் ஈடுபடுவதற்காக) தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; (வழக்கத்தைவிட அதிகமாக வழிபாட்டில்) அதிகக் கவனம் செலுத்துவார்கள்; தமது கீழாடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள்.

அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி ‎أسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إلَيهِ நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்

அஸ்தஃக் ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி ‎أسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إلَيهِ நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள், “யமன் இரு மாகாணங்களாகும்” என்று சொன்னார்கள். பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள். வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். நூல்: புகாரி 4341