கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார்

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்ளவார்கள். அவர்கள் யாரெனில், ஒதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள், தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி – 5705

விளக்கம்:

மறுமை நாளில் சொர்க்கம் செல்வதற்கு இலகுவான ஒரு வழியை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஓதிப் பார்க்காமலும் பறவை சகுனம் பார்க்காமலும் இருந்து, இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தால் நாம் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லலாம். அன்றைய காலத்தில் ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர் பறவைச் சகுனம் பார்ப்பார்கள்.

பறவைகள் மீது நம்பிக்கை வைத்து இறைவனை மறக்கும் செயலில் ஈடுபட்டதைப் போன்று இல்லாமல் முழுக்க முழுக்க இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் சொர்க்கத்தை இலகுவாகப் பெற்றிடலாம்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக (அல்குர்ஆன் 9.51 என்ற வசனமும் இந்தக் கருத்தையே தெரிவிக்கிறது.

 

*இறைவனுக்கு இணை கற்பிக்காமல் குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதற்கு நபியவர்கள் அனுமதித்துள்ளதால் அதைச் செய்வது குற்றமில்லை.*

ஆனால் அது போன்று எதையும் செய்யாமல் *இறைவன் மீதே முழுமையாக தவக்கல் வைக்கக் கூடியவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு அந்தஸ்து தான் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் பாக்கியமாகும்.*

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் ஓதிப் பார்த்தாலும் இந்தப் பாக்கியம் கிடைக்காது என்றால் அதை ஏன் நபியவர்கள் கற்றுத் தர வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.

ஓதிப் பார்க்க விரும்புவோர் எதைக் கொண்டு ஓதிப் பார்க்க வேண்டும்? என்று கற்றுத் தருவது *நபி (ஸல்) அவர்களின் பொறுப்புகளில் உள்ளது என்பதால் அதைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதே சமயம் ஓதிப் பார்க்காமல் இருப்பது சிறந்த செயல் என்பதை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.*

எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.

*الله اعلم*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed