Category: Quran & Hadith Images

நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு வழங்குமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். மானக் கேடானவை, தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை

அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்

அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள்.

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.