Category: குர்ஆன் விளக்கங்கள்

மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை விரட்டிய சொந்த ஊரைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள் என கனவின் மூலம் இறைவன் காட்டினான். இவ்வசனத்தில் (48:27) கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.

மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா?

திருக்குர்ஆனின் இந்த (6:76-78) வசனங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது இப்ராஹீம் நபியவர்கள் முதலில் நட்சத்திரத்தைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சந்திரனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சூரியனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு இவை கடவுளாக இருக்க முடியாது என்று விளங்கிக்…

வானவர்களிலும் தூதர்கள்

குர்ஆனில் பெரும்பாலான இடங்களில் இறைவனால் தேர்வுசெய்யப்பட்ட மனிதர்கள் தான் தூதர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். சில இடங்களில் வானவர்களையும் தூதர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை (6:61, 7:37, 10:21, 11:69, 11:77, 11:81, 15:57, 15:61, 19:19, 22:75, 29:31, 29:33, 35:1,…

மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்

இவ்வசனத்தில் (6:61) பாதுகாவலர்கள் என்று கூறப்படுவது வானவர்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய தவணை வருவதற்கு முன் அவனைக் காப்பாற்றும் பணிக்கென வானவர்கள் உள்ளனர். ஒரு விபத்தில் பலரும் பலியாகும்போது சிலர் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டதாகக் கூறுகின்றனர். அவர்களுக்கான மரண…

அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?

இந்த வசனங்களில் (6:47, 46:35) அல்லாஹ்வின் தண்டனை வரும்போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று கூறப்படுகிறது. அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும்போது கெட்டவர்கள் மட்டும்தான் தண்டிக்கப்படுவார்கள். நல்லவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று இவ்வசனம் கூறுவதாகத் தெரிகிறது. ஆனால் புயல், மழை,…

பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீயவழி செல்வோருக்குச் சார்பாக இருந்திருந்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் இரு மடங்கு வேதனையை சுவைக்கச் செய்திருப்பேன் என்று இவ்வசனத்தில் (17:75) அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிக் கட்டத்தில் நோய் வாய்ப்பட்டபோது…

எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில் நான்கு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1 – திருக்குர்ஆன் 2 – முந்தைய வேதங்கள் 3 – லவ்ஹூல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவை 4 – ஒவ்வொரு விநாடியும்…

வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?

வானவர்களைத் தூதர்களாக அனுப்பாமல் மனிதர்களை ஏன் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற மக்களின் கேள்விக்கு இவ்வசனங்கள் (6:8,9, 17:95, 23:24, 25:7, 41:14) பதிலளிக்கின்றன. மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம் வேதத்தைக் கொடுத்து அனுப்பினால் நாங்கள் நம்பிக்கை…

வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள்

வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. அந்தப் பணிகள் அல்லாமல் தீயவர்களை இறைவன் அழிக்க நாடும்போது அதற்காகவும் வானவர்களை அனுப்புவான். அவர்கள் இறைவனின்…

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

முஸ்லிம்களில் சிலர், திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதாகக் கூறுகின்றனர். இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று…

ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

இவ்வசனங்கள் (5:116-118) மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் கூறுகின்றன. இவ்வசனத்தில் “என்னை நீ கைப்பற்றியபோது” என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் ‘தவஃப்பைத்தனீ’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு “என்னை மரணிக்கச் செய்தபோது’ என்று…

மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?

இவ்வசனத்தில் (5:101) இறைச்செய்தி அருளப்படும்போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்களிடம் எந்த எதிர்க்கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறுவோர் இவ்வசனத்தைத் தமக்குச் சான்றாகக் காட்டுவார்கள். ஆனால் இவ்வசனம் இறைச்செய்தி அருளப்படும்போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று…

திருப்பித் தரும் வானம்

இவ்வசனத்தில் (86:11) வானத்திற்கு திருப்பித் தரும் வானம் என்ற ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே…

அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

இவ்வசனம் (5:103) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கையைக் கண்டித்து திருத்துகிறது. அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காகக் கால்நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களைத் தெய்வங்களுக்கு என விட்டு விடுவார்கள். இவ்வாறு…

கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களா?

இவ்வசனத்தில் (5:82) கிறித்தவர்கள் மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு நெருக்கமானாவர்கள் என்று புகழ்ந்து சொல்லப்பட்டுள்ளனர். வரலாறு தொடர்பான இது போன்ற செய்திகளை சொல்லப்பட்ட காலத்தில் இப்படி இருந்துள்ளது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இது எக்காலத்துக்கும் உரியது என்று கருதக்…

சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்?

சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கக்கூடாது என்று யூதர்களுக்கு ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடையை அவர்கள் மீறியதால் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்பது குறித்து 23வது குறிப்பில் விளக்கியுள்ளோம். சனிக்கிழமை மீன் பிடித்த குற்றத்துக்காக குரங்குகளாக மாற்ற வேண்டுமா? இதைவிட பெரும்பாவங்கள் செய்தவர்கள்…

யாராலும் கொல்ல முடியாத தலைவர்

இவ்வசனத்தில் 5:67 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாரும் கொல்ல முடியாது என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று…

அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை

இந்த வசனங்கள், (13:8, 22:5) மிகப்பெரும் அறிவியல் உண்மையைக் கூறுகின்றன. பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம்.…

பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

இவ்வசனத்தில் (15:9) திருக்குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று இறைவன் கூறுவதாகக் கூறப்படுகிறது. திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். மேலும் அந்தக் காலத்தில் எழுதி வைத்துக் கொள்ளும் சாதனங்களாக மரப்பட்டைகளும், அகலமான…