Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ
خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ ‏
Sahl b. Sa’d reported the prophet (ﷺ) as saying:
I swear on Allah, it will be better for you that Allah should give guidance to one man through your agency than that you should acquire the red ones among the camels.
Sunan Abi Dawud 3661

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ இல்லாத ‎தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لاَ يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَةً مِنْ غُلُولٍ وَلاَ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ
Narrated AbulMalih: The Prophet (ﷺ) said: Allah does not accept charity from goods acquired by embezzlement as He does not accept prayer without purification.
Sunan an-Nasa’i 2524

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
தனது செல்வத்தை நியாமின்றி அடைய
முயற்சிக்கும் ஒருவருடன் சண்டையிட்டவர் அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ»
Narrated Abdullah ibn Amr ibn al-‘As:
The Prophet (ﷺ) said: If the property of anyone is designed to be taken away without any right and he fights and is killed, he is a martyr.
Sunan Abi Dawud 4771

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட…

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா?

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப்…

நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்? சூரியன் உதிக்கும் போதும் உச்சிக்கு வரும் போதும் மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில்…

‎ ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.
‎وَلَنَبۡلُوَنَّكُم بِشَیۡءࣲ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصࣲ مِّنَ ٱلۡأَمۡوَ ٰ⁠لِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَ ٰ⁠تِۗ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِینَ ٱلَّذِینَ إِذَاۤ أَصَـٰبَتۡهُم مُّصِیبَةࣱ قَالُوۤا۟ إِنَّا لِلَّهِ وَإِنَّاۤ إِلَیۡهِ رَ ٰ⁠جِعُونَ
We will certainly test you with some fear and hunger, and some loss of possessions and lives and crop. But give good news to the steadfast. Those who, when a calamity afflicts them, say, To God we belong, and to Him we will return.
[2. Al-Baqarah, Ayah:155-156]

நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர
வணக்கத்திற்குரியவன் யாருமில்லை…
اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
O Allah, forgive me what I have sent before me and what I have left behind me, what I have concealed and what I have done openly, what I have done in excess, and what You are better aware of than I. You are the One Who sends forth and You are the One Who delays. There is none worthy of worship but You.
Ali bin Abi Talib narrated;
Jami` at-Tirmidhi 3371

“என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!”
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
My Lord, direct me to be thankful for the blessings you have bestowed upon me and upon my parents, and to do good works that please You. And admit me, by Your grace, into the company of Your virtuous servants
[27 An-Naml :19]

இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன?

இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன? ஒரு விஷயத்தில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும் போது தொழும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அந்த நேரத்தில் ஓதுவதற்கென ஒரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை…

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களின் பங்கு

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களின் பங்கு முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்’ என்ற கருத்தைப் போலவே “இந்தியாவில் முஸ்லிம்கள்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப் பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.
وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ، إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا‏.‏
Allah’s Messenger (ﷺ) never took revenge (over anybody) for his own sake but (he did) only when Allah’s Legal Bindings were outraged in which case he would take revenge for Allah’s Sake.
Narrated `eAisha: Sahih al-Bukhari 3560

பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் விட்டு யார் விலகிக் கொள்கிறாரோ (அவர் மன்னிப்பு கேட்டால்) உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். அற்பமானவைகளைத் தவிர.
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ
Those who avoid gross sins and indecencies—except for minor lapses—your Lord is of Vast Forgiveness.
[53.An-Najm 32]

Fasting the day of Ashura
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ
أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ
It was narrated from Abu Qatadah
that the Messenger of Allah (ﷺ) said:
Fasting the day of ‘Ashura’, I hope,
will expiate for the sins of the
previous year.
Sunan Ibn Majah 1738

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدُ
بْنُ عُبَادَةَ أَتَبْكِي فَقَالَ ‏”‏
إِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ ‏”‏‏.
The Prophet (ﷺ) said, Allah is merciful
only to those of His slaves who are
merciful (to others).
Narrated Usama:Sahih al-Bukhari 7448

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா? ரஹீம்’ என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்…

ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார்

ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று திருக்குர் ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது இந்த விவகாரத்தில் இஸ்லாத்தில் எந்த சமரசமும் இல்லை. قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ…

அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?

*அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?* அல்லாஹ்வுடைய பெயர்களில் மனிதர்களுக்கும் வைக்க முடியுமான பெயர்களும் உண்டு. அந்தப் பெயர்களில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகாத வகையில் அவனுக்கே உரிய தகுதியில் இருக்கிறான். ரஹீம்–இரக்கமுள்ளவன் (முஃமின்களுடன் அவர் இரக்கமுள்ளவராக இருப்பார் என்று நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்…

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.
قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ
‏ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
Narrated Abu Musa: Some people asked Allah’s Messenger (ﷺ), “Whose Islam is the best? i.e. (Who is a very good Muslim)?” He replied, “One who avoids harming the Muslims with his tongue and hands
Sahih al-Bukhari 11

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்.
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي
And when My servants ask you about Me, I Am near; I answer the call of the caller when he calls on Me. So let them answer Me, and have faith in Me
Al-Baqarah, Ayah 186