Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

மாதவிடாயின்போது தவிர்க்க வேண்டியவை

இந்த வசனத்தில் (2:222) மாதவிடாய் நேரத்தில் மனைவியரை விட்டு கணவர்கள் விலகியிருக்குமாறு கூறப்படுவதால் அப்பெண்கள் தொழுகை, நோன்பு உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறாகும். எப்படி இது தவறாக உள்ளது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.…

நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்கு பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன…

மனிதனை அல்லாஹ்வின் கலீஃபா என்று சொல்லலாமா?

இவ்வசனங்களில் (2:30, 6:133, 6:165, 7:69, 7:74, 7:129, 7:142, 7:150, 7:169, 10:14, 10:73, 11:57, 19:59, 24:55, 27:62, 35:39, 38:26, 43:60, 57:7) கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப்…

மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்

இவ்வசனங்கள் (2:180; 2:240; 4:11-12; 5:106) மரண சாசனம் செய்வது குறித்தும், வாரிசுரிமை குறித்தும் பேசுகின்றன. வாரிசுரிமைச் சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது என்று 2:180, 2:240 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. எந்தெந்த உறவினருக்கு எவ்வளவு சொத்துக்கள்…

தொழுகையின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா

தொழுகையின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ,மெதுவாகவோ கூற வேண்டும். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும். ‘நபி…

பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

இவ்வசனத்தில் (2:185) “ரமளான் மாதம் பிறந்து விட்டால் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறாமல் “யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக மாதம் துவங்குவதைப் பற்றிப் பேசும்போது இவ்வாறு யாரும் கூறுவதில்லை. திருக்குர்ஆன் தக்க காரணத்துடன்…

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இவ்வசனங்களில் (2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4) இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் விமர்சனங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. “இஸ்லாமியக் குற்றவியல்…

தடை செய்யப்பட்ட உணவுகள்

நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. தாமாகச் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது. அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதன்…

இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்!” என்று இவ்வசனங்கள் (2:154, 3:169) கூறுகின்றன. இதை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர்; எனவே அவர்களை வழிபடலாம்; அவர்களை…

கிப்லா குறித்து இரு வேறு விமர்சனங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தவுடன் ஜெருஸலத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித் தொழுதார்கள். இது யூதர்களுக்கும் கிப்லாவாக இருந்தது. இதை இரண்டு சாரார் இரு வேறு விதமாக விமர்சனம் செய்தனர். “இவர் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப்…

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின்போது ஒரு கிப்லாவை – திசையை – முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தக் கிப்லா – திசை – மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றி 2:142-145 வசனங்களில் அல்லாஹ்…

அல்லாஹ் தீட்டும் வர்ணம்

ஒருவர் ஒரு மதத்தைத் தழுவும்போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து “இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார்” எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாத்தில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம் கலந்த நீரோ, வண்ணப் பொடிகளோ தேவையில்லை.…

நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

இவ்வசனங்கள் (2:136, 2:253, 2:285, 3:84, 17:55) இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகின்றன. இவர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்யவில்லை” என்று கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும். அல்லாஹ் தகுதியானவர்களையே தேர்வு…

யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. உமது இறைவன் அடியாருக்கு அநீதி இழைப்பவனல்லன்.* مَّنۡ عَمِلَ صَـٰلِحࣰا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَاۤءَ فَعَلَیۡهَاۗ…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * குர்ஆனை ஓதிக் காட்டுவது * மக்களைத் தூய்மைப்படுத்துவது * மக்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்…

மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

மகாமு இப்ராஹீம் என்பது என்ன? 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது. மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான…

பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபயபூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன. கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக்…

அந்த ஆலயம் என்பது எது?

திருக்குர்ஆனின் 2:125, 2:127, 2:158, 3:97, 5:2, 5:97, 8:35, 22:26, 22:29, 22:33, 106:3 ஆகிய வசனங்களில் அந்த ஆலயம் என்ற சொற்றொடர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும், அதன் வளாகத்தையும் குறிக்கும்.

பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

இவ்வசனங்கள் (2:114, 96:8-18) பள்ளிவாசல்களுக்கு உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே; அதில் அல்லாஹ்வை மட்டும் வழிபடும் எவரையும் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றன. உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் பீடங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன. குளம், கிணறு, சாலைகள் மற்றும் அரசு…

மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும்போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு…