Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது. இவ்வாறு சத்தியம்…

நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்

இவ்வசனங்களில் 2:224, 2:225, 3:77, 5:89, 16:91, 16:94, 58:16, 63:2 சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் கூறப்படுகின்றன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் 5:89 வசனத்தில்…

மனைவியர் விளைநிலங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து யூதர்கள் சில முறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்று கருதி வந்தனர். அவ்வாறு உறவு கொண்டால் குழந்தை மாறு கண்ணுடையதாகப் பிறக்கும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து…

செலவிடும் முறை

இவ்வசனத்தில் (2:215) எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படுகிறது. கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக “செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்” என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (2:215) தெளிவுபடுத்துகிறது. மற்ற பணிகளுக்குச்…

அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?

இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்பதுதான் பொருள். “வானவர்கள் அணி வகுக்க உமது…

இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்” என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது. ஆனால் இதன்…

தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

ஹஜ் கடமையின்போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் ‘அரஃபாத்’ எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் ‘முஸ்தலிஃபா’ எனும் இடத்தில் தங்குவார்கள். ‘முஸ்தஃலிபா’ என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், ‘அரஃபாத்’…

ஹஜ்ஜின் போது வியாபாரம்

ஹஜ்ஜுக்காகச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது. (பார்க்க: புகாரி 1770, 2050, 2098) ஹஜ்ஜுக்காகச் செல்பவர் இங்கிருந்து வியாபாரப் பொருட்களை…

இணையவழி போராட்டம் ஹதீஸுக்கு மாற்றமானதா?

இணையவழி போராட்டம் ஹதீஸுக்கு மாற்றமானதா? தொற்று ஏற்பட்டால் அவ்வூரிலிருந்து வெளியேறாதீர்கள் என ஹதீஸ் இருக்கும் போது, நாம் அயல்நாட்டு தமிழர்கள் நாடு திரும்ப கோரிக்கை வைப்பது சரியா என சிலர் கேட்கின்றனர். பலமுறை சொல்வது போல, கேள்வி கேட்பவர்கள் இரண்டு ரகத்தில்…

பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது.

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது. பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான்…

ஹஜ்ஜின் மாதங்கள்

அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது. துல்ஹஜ் எனும் ஒரு மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். ஆனால் மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. அரபு மொழியில் இரண்டைக் குறிக்க இருமை என்ற அமைப்பு…

ஹஜ்ஜின் மூன்று வகை

இவ்வசனம் (2:196) தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. தமத்துவ் வகை ஹஜ் என்றால் என்ன? அது அல்லாத வேறு வகை ஹஜ் உண்டா என்ற விபரம் இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை.…

புனித மாதங்கள் எவை

போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன. 9:36 வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும்…

மதம் மாற்ற போர் செய்யக்கூடாது

இவ்வசனங்களில் (2:193, 8:39) “கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்” என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள ‘தீன்’ என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய…

மதம் மாற்ற போர் செய்யக்கூடாது

இவ்வசனங்களில் (2:193, 8:39) “கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்” என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள ‘தீன்’ என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய…

பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன. ஆன்மிக வழிகாட்டும் நூலில்…

அரபுகளின் மூட நம்பிக்கை

ஹஜ் மற்றும் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இஹ்ராமுடன் இருக்கும்போது அன்றைய அரபுகள், முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வராமல் கொல்லைப்புறமாக வருவார்கள். இது போன்ற மூட நம்பிக்கைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கும் அவர்கள், கஅபாவில் கும்மாளம் போட்டு சீட்டியடித்துக் கொண்டிருப்பார்கள். இறைவனை அஞ்ச…

பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?

இந்த வசனத்தில் (2:189) பிறைகள் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நிலவுதானே இருக்கிறது. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். பிறைகள் என்று தமிழாக்கம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘ஹிலால்’ எனும் மூலச்சொல்லின் பன்மையான அஹில்லா என்ற…

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் நோன்பின் சட்டம்

நோன்பு நோற்றிருப்பவர் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது; இரவு நேரங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் தம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் இருந்தது. அது மாற்றப்பட்டு நோன்பாளிகள்…

இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை

இவ்வசனங்கள் (2:186, 4:108, 7:56, 11:61, 20:46, 34:50, 40:60, 50:16, 56:85, 57:4, 58:7) இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை என்ற இஸ்லாத்தின் தெளிவான கடவுள் கொள்கையை எடுத்துச் சொல்கின்றன. பொதுவாகக் கடவுளை மனிதனால் எளிதில் அணுக முடியாது என்று மக்கள்…