Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறும் இவ்வசனம் (4:105) மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறுகிறது. விளக்கம் தேவைப்படுகின்ற ஒவ்வொரு வசனத்திற்கும் இதுதான் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி…

அச்சமற்ற நிலையில் தொழும் முறை

போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (4:103) கூறுகிறான். ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறப்படவில்லை.…

போர்க்களத் தொழுகை

இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது. போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும்போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க…

பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

இவ்வசனத்தில் (4:101) பயணத்தின்போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை. இன்றைக்கு அச்சமில்லாத சூழ்நிலையிலும் பயணங்களில் நாம்…

வதந்தி பரப்பக் கூடாது

கேள்விப்பட்ட செய்திகளைப் பரப்பி குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்றும், தகுதியானவர்களின் கவனத்துக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் இவ்வசனம் (4:83) கூறுகிறது. நன்மை செய்கிறோம் என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதைச் சிலர் விளையாட்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர். பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள்…

முரண்பாடில்லாத திருக்குர்ஆன்

இவ்வசனங்களில் (4:82, 41:42) திருக்குர்ஆனில் முரண்பாடும், தவறும் இல்லை என்று கூறப்படுகிறது. மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தான் கூறியதை, தானே மறந்து முரண்பாடாகக் கூறி விடுவான். அல்லது தவறாகப் புரிந்து கொண்டு முதலில் ஒன்றைக் கூறி விட்டு பிறகு…

கண் திருஷ்டி சூனியம் உண்டா❓

கண் திருஷ்டி சூனியம் உண்டா❓ இதை இஸ்லாமியர்கள் நம்பலாமா❓ கண்திருஷ்டி சூனியம் இல்லை என்றால் குர்ஆன் வசனங்களில் சூனியம் பற்றிய செய்திகளும் 114 வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகளும் இடம்பெற்றுள்ளதே முழுமையான விளக்ககம் தரவும் சூனியம் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே…

அவனுக்குத் தெரியாமல் கிளைகளிலிருந்து கனிகள் வெளிப்படுவதோ,

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அவனிடமே திருப்பப்படும். அவனுக்குத் தெரியாமல் கிளைகளிலிருந்து கனிகள் வெளிப்படுவதோ, எந்தப் பெண்ணும் கர்ப்பமடைவதோ, பிரசவிப்பதோ இல்லை.* *எனக்கு இணையாகக் கருதப்பட்டோர் எங்கே?* என்று அவர்களை அவன்…

கனவுகளின் பலன்களை அறிய முடியுமா?

இவ்வசனங்களில் (8:43, 12:4, 12:5, 12:36, 12:37, 12:43, 12:44, 12:100, 37:102, 37:105, 48:27) பல்வேறு கனவுகள் பற்றி கூறப்படுகிறது. பொதுவாகக் கனவுகள் பற்றி அதிகமான முஸ்லிம்கள் சரியான விளக்கமில்லாமல் உள்ளனர். கனவுகளுக்கு விளக்கம் என்ற பெயரில் வாயில் வந்தவாறு…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டலாமா?

பாவம் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தாங்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் மன்னிப்பான் என்று இவ்வசனம் (4:64) கூறுகிறது. இதை ஆதாரமாகக் காட்டி, நபிகள் நாயகம் (ஸல்)…

தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்

இவ்வசனத்தில் (4:59) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் காட்டுப்படுங்கள் என்றும், அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்றும் கூறப்படுகிறது. திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அந்தச் சான்றுகளைப்…

தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன

இவ்வசனத்தில் (4:56) நரகவாசிகளின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று கூறப்படுகிறது. வேதனைகளை உணரும் நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் தீக்காயத்தை மூளை உணராது என…

முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்தபோது இவ்வசனம் (73:20) அருளப்படுகிறது. பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். இப்படிக் கூறும்போது “உங்களில் நோயாளிகளும்,…

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்

தொழுகைக்கு முன் கை, கால், முகங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவது அவசியம் என 5:6 வசனம் கூறுகிறது. உடலுறவு கொண்டிருந்தால் அப்போது கை, கால், முகங்களைக் கழுவுவது போதாது. மாறாகக் குளிக்க வேண்டும். இவ்வாறு தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டால்…

படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்

எப்போதும் குடி போதையில் இருந்த அன்றைய மக்களுக்கு, மது அருந்துதல் முதலில் தடுக்கப்படாமல் இருந்ததாக 16:67 வசனம் கூறுகிறது. பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின. போதையாக இருக்கும்போது தொழக்கூடாது என்ற கட்டளை ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்டதாக 4:43 வசனம் கூறுகிறது.…

விபச்சாரத்திற்கான தண்டனை

ஆண்களோ, பெண்களோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர். திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண…

மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்

இவ்வசனத்தில் (4:23) “இரண்டு சகோதரிகளை மணப்பது கூடாது; நடந்து முடிந்தவைகளைத் தவிர” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு ஏற்கனவே மனைவியின் சகோதரியையும் மணந்திருந்தால் அவர்களுடன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கின்றனர். “முன்னர் நடந்து விட்டதைத் தவிர” என்ற…

மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை

விபச்சாரம் செய்த பெண்கள் மரணிக்கும் வரை அவர்களை வீட்டுக் காவலில் வையுங்கள் எனவும், அல்லாஹ் வேறு வழியைக் காட்டும்வரை தான் இச்சட்டம் செல்லும் எனவும் இவ்வசனம் (4:15) கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வேறு வழியை இறைவன் காட்டினான். விபச்சாரம் செய்யும்…

விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்

விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே குற்றம் சுமத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும்…

பாதிப்பு ஏற்படாத பங்கீடு

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம்…