Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்?

இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள். இஸ்லாமிய ஆட்சியில்…

பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?

கஅபா ஆலயத்துக்கு முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று இவ்வசனத்தில் (9:28) கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலே அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. போர்க்களங்களில் கைதிகளாகப் பிடிக்கப்படுவோர்…

எதிரிகளை முழுமையாக முறியடித்தல்

போர் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தோற்றவர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் படை திரட்டிக் கொண்டு அடுத்த போருக்கு வருவார்கள். அதே சமயம் எதிரிகள் அடியோடு முறியடிக்கப்பட்டு அவர்கள் எதிர்த்துப் போரிடவே அஞ்சும்…

பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை

முஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது. இந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது. ஆரம்பத்தில் எதிரிகளின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால்…

ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளுமாறு இவ்வசனம் (8:60) கூறுகிறது. படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை புரிந்து கொள்ளக் கூடாது. மக்காவில் இருந்தபோதும், அபிஸீனியாவில்…

திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர் பத்ருப் போராகும். இப்போர் திட்டமிடாமல் நடந்ததாக இவ்வசனம் (8:42) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக்…

போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு

இவ்வசனத்தில் (8:41) போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் பிரித்துக்…

அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்

அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்” என்று இவ்வசனங்களில் (8:23, 8:70) கூறப்படுகிறது. அறிந்திருந்தால் என்று கூறுவதால் அல்லாஹ் அறியாமலும் இருப்பானா என்று கருதக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும்போது, அனைத்தையும் அறிந்தவன் எனவும், தனக்குத் தெரியாதது…

அத்வைதத்தின் அறியாமை

இவ்வசனத்தில் (8:17) பத்ருப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகள் மீது சிறு கற்களை வீசியதைப் பற்றிக் கூறும்போது இதை நீர் எறியவில்லை. நான் தான் எறிந்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒருவரே என்று அத்வைதம்…

உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்

இவ்வசனத்தில் (7:205) அல்லாஹ்வை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இறைவனின் பெயரை நினைவு கூர்வது இஸ்லாத்தில் ஒரு வணக்கமாக உள்ளது. தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நமது விருப்பப்படி அவற்றைச் செய்ய முடியாது.…

ஆதம் நபி இணை கற்பித்தாரா?

ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவியும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள் என்று பலரும் இந்த வசனங்களை (7:189,190) புரிந்து கொள்கின்றனர். இவ்வசனங்களின் துவக்கத்தில் முதல் மனிதரைப் பற்றிக் கூறப்படுவதால், “இணைகற்பித்தார்கள்” என்ற சொற்றொடர் ஆதமைத்தான் குறிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஆதம் (அலை)…

அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் இவ்வசனங்கள் (7:180, 17:110) கூறுகின்றன. அல்லாஹ்வின் பெயரைத் திரித்துக் கூறுவதும், சிதைப்பதும் கடும் குற்றம் எனவும், அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் இவ்வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன. இன்று…

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து

இவ்வசனத்தில் (7:172) ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவரது சந்ததிகளை வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் தமது தோற்றம், அறிவு, மற்றும் குண நலன்கள் அனைத்தையும் தமது முன்னோர்களின் மரபணுக்களில் இருந்தே பெற்றுக் கொள்கிறார்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. தனது…

தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே!

முந்தைய சமுதாயத்தில் தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதவர்கள் ஆகிய மூன்று வகையினர் இருந்தனர். அவர்களில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் அல்லாஹ் காப்பாற்றியதாக இவ்வசனம் (7:165) கூறுகிறது. தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து…

இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தான்

இவ்வசனங்கள் (4:79, 6:19, 7:158, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி எனவும், அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் எனவும் கூறுகின்றன. முதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் முதல்…

தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்

இவ்வசனங்களில் ஒன்றை ஹலாலாக ஆக்கவும், ஹராமாக ஆக்கவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.…

நயவஞ்சகர்கள் வெளியேற்றம் குறித்த முன்னறிவிப்பு

இவ்வசனத்தில் (33:60) ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இதில் கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு அப்படியே நிறைவேறியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலை விரைவில் உருவாகும் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு. இந்த…

வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்

மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது. இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். தன்னை இறைத்தூதர் என்பதை…

ஜின்களின் ஆற்றல்

இவ்வசனத்தில் (27:39) ‘இஃப்ரீத்’ என்ற ஜின் ஸுலைமான் நபி எழுந்திருப்பதற்குள் சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என ஸுலைமான் நபியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஆயினும் இதற்கு அடுத்த வசனத்தில் (27:40) “கண்மூடித் திறப்பதற்குள் அதைக் கொண்டு வருகிறேன்”…

ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்

இவ்வசனங்களில் (7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18) முஸ்லிமல்லாத ஒரு அரசனிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மூஸா நபியவர்கள் உரிமைக் குரல் எழுப்பிய விபரம் சொல்லப்பட்டுள்ளது. மூஸா நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் பணியுடன் மற்றொரு பணிக்காகவும் அனுப்பப்பட்டார்கள். அன்றைய ஆளும்…