Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா?

இவ்வசனங்களில் (11:107,108) “வானங்களும், பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்” என்று சொல்லப்படுகிறது. அதாவது வானமும், பூமியும் எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை இது தருகிறது. ஆனால் 55:26,27 வசனங்கள்…

அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்

எந்த நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகப் பேரருள் புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்காக…

பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் யார்?

இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம்) அவர்கள் தமது ஒரு மகனை இறைவனுக்காகப் பலியிட முயன்றார். அப்போது அதைத் தடுத்து ஒரு ஆட்டை இறைவன் பலியிடச் செய்து அந்த மகனைக் காப்பாற்றினான் என்று முஸ்லிம்கள் நம்புவது போல் கிறித்தவர்களும் நம்புகிறார்கள். பலியிட அழைத்துச் செல்லப்பட்ட…

ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்

இவ்வசனங்களில் (7:64, 10:73, 11:44, 23:30, 26:121, 29:15, 54:15, 69:12) நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேலே கப்பல் நிலைகொண்டது. இம்மலை…

தண்ணீர் பொங்கியபோது

இவ்வசனங்களில் (11:40, 23:27) தண்ணீர் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘தன்னூர்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது அரபு அல்லாத வேற்றுமொழிச் சொல்லாகும். பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு அடுப்பு என்று பொருள் கொண்டுள்ளனர். பாரசீகம், உருது ஆகிய மொழிகளில்…

வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்

இவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர். ஆயினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபிமார்கள்…

யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு

இறைத்தூதர்கள் அனுப்பப்படும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர். தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ் நபியின் சமுதாயம் இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது,…

நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?

நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர் என்று இவ்வசனத்தில் (10:94) கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்றும்,…

பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனத்தில் (10:92) அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்துக்கு அறிஞர்கள் இருவிதமாக விளக்கம் கொடுக்கின்றனர். கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்து வைத்து இறுதிக் காலத்தில் வெளிப்படுத்துவான் என்பது சில அறிஞர்களின்…

எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்

இவ்வசனத்தில் (10:87) வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. கிப்லா என்ற சொல்லுக்கு தொழும்போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளும், நேருக்குநேர் என்ற பொருளும் உள்ளன. தொழும்போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளையே அதிகமான அறிஞர்கள் கொடுத்துள்ளனர். இவர்களின் கருத்துப்படி…

இறை நேசர்களுக்கு அச்சமில்லை

இவ்வசனத்தைச் (10:62) சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை. மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை…

ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்

இவ்விரு வசனங்களிலும் (10:47, 16:36) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சில சமுதாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் அனுப்பப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஒரு சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்ட இரு…

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

இவ்வசனங்கள் (10:18, 39:3) போலித்தனமான கடவுள் கொள்கைக்குப் பதிலடியாக அமைந்துள்ளன. அல்லாஹ்விடம் எங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்து பேசுவார்கள் என்றும் வாதிட்டு அல்லாஹ் அல்லாத மற்றவர்களை சில முஸ்லிம்கள் வணங்கி வருகின்றனர். அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை

இவ்வசனத்தில் (10:16) தமது தூய வாழ்க்கையை ஆதாரமாகக் காட்டி தூதுத்துவத்தை நிறுவுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. தாம் இறைத்தூதர் என்பதற்குத் தமது கடந்த கால வாழ்க்கையை முக்கியமான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள்.…

அனைவரும் கல்வி கற்க வேண்டுமா?

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக சிலராவது புறப்பட்டு இருக்க வேண்டாமா என்று இவ்வசனத்தில் (9:122) கூறப்பட்டுள்ளது. மார்க்கத்தை அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம் என்றாலும் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது அனைவருக்கும் கடமையில்லை. அவரவர் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய விஷயங்களை அறிவது தான்…

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்

இவ்வசனத்தில் (9:118) மூன்று நபர்களை அல்லாஹ் மன்னித்ததாகச் சொல்கிறான். மிகவும் நெருக்கடியான, சிரமமான கட்டத்தில் நடைபெற்ற போர்களில் தபூக் போரும் ஒன்று. இப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தனர். ஆயினும் மூன்று நபித்தோழர்கள் போருக்குப்…

கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு

தவறுதலாக ஒருவன் இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (4:92) கூறுகிறது. இழப்பீட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு நூறு மாடுகள், அல்லது இரண்டாயிரம்…

விரல் நுனிகளையும் சீராக்குதல்

விரல் நுனிகளையும் சீராக்குதல் மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான். இதை விட முக்கியமான பகுதிகள் மனித உடலில் இருக்கும்போது விரல் நுனிகளை மட்டும்…

இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு

மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும்போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ‘துளி’ என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் (76:2)…

நாடோடிகளுக்கும் ஸகாத்

ஸகாத் நிதியை நாடோடிகளுக்கும் செலவிடலாம் என்று இவ்வசனத்தில் (9:60) கூறப்பட்டுள்ளது. மேலும் பல வசனங்களிலும் (2:177, 2:215, 4:36, 8:41, 17:26, 30:38, 59:7) நாடோடிகளுக்கு தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் ‘இப்னுஸ்…