Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை

இப்ராஹீம் நபியின் சில பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்கவில்லை என்று இவ்வசனங்கள் (2:245,14:35) கூறுகின்றன. இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு உற்ற நண்பராக இருந்தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை திருக்குர்ஆன் உயர்த்துகிறது.…

சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி

ஒரு இறைத்தூதர் எந்த மக்களுக்கு அனுப்பப்படுகிறாரோ அவர் அந்த மக்கள் பேசும் மொழியை அறிந்தவராகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருப்பார் என்று இவ்வசனங்கள் (14:4, 19:97, 44:58) கூறுகின்றன. இதற்குக் காரணம் அந்தத் தூதர் தனக்கு வழங்கப்பட்ட வேதத்தை அம்மக்களுக்கு விளக்கிச்…

ஓரங்களில் குறையும் பூமி

இவ்வசனங்களில் (13:41, 21:44) பூமியின் ஓரங்கள் குறைந்து வருகின்றன என்று கூறப்படுகின்றது. நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு, குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பனிப்பாறைகள் உருகிக் கடலில் கலக்கின்றன.…

அனைத்திலும் ஜோடி உண்டு

உயிரினங்களிலும், தாவரங்களிலும் ஜோடிகளை அல்லாஹ் அமைத்திருப்பதாக இவ்வசனங்களில் (13:3, 20:53, 36:36, 43:12, 51:49) கூறப்படுகின்றது. தாவரங்களிலும் ஆண், பெண் என ஜோடிகள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. பிற்கால விஞ்ஞானிகள் தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களிலும்…

ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

இவ்வசனங்களில் (13:2, 31:29, 35:13, 36:38 39:5) சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்றும், ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் கூறப்படுகிறது. 21:33, 36:40 வசனங்களிலும் இவ்வாறு கூறப்படுகிறது. பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு…

வானத்திற்கும் தூண்கள் உண்டு

இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்தான் எனக் கூறப்படுகிறது. “வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளை உங்களால் பார்க்க முடியாது” என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமைந்துள்ளன. பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா?…

காரியம் சாதிக்க தந்திரம் செய்யவது கூடுமா?

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதை இவ்வசனங்கள் (12:109, 16:43, 21:7) கூறுகின்றன. “பெண்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை இழிவுபடுத்துவது தான் காரணம்” என்று சிலர் கூறுகின்றனர். ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே…

பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்

பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் என்று இவ்வசனத்தில் (70:43) கூறப்பட்டுள்ளது. பலி பீடங்களில் பலிகொடுத்த பின் அதை எடுப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் விரைந்து செல்வார்கள். நமது நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களில் தேங்காய் உடைக்கும்போது அதைப்…

முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்

யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கிறார்கள். தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் விஷயத்துக்கு மட்டும் தமது தந்தை யாகூப் நபியின் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும், மற்ற விஷயங்களில் தமது மன்னரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் இவ்வசனங்களில் (12:74-76)…

காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?

யூஸுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது. ஒருவர் மீது பொய்யான பழி சுமத்தலாம் என்ற கருத்தையும்,…

ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?

இவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யாகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு யாகூப் நபியவர்கள் கூறியதாக சிலர் இதற்கு விளக்கம்…

மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா

இவ்வசனங்களில் (4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12) அல்லாஹ்வின் சட்டங்களுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதைச் சரியாக விளங்காத சிலர் இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழ்வோர் அந்த…

பதவியைக் கேட்டுப் பெறலாமா?

இவ்வசனத்தில் (12:55) என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால்…

துரோகம் செய்யவில்லை’ என்று கூறியது யார்?

இவ்வசனத்தில் (12:52) அவர் மறைவாக இருக்கும்போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற வாக்கியம் உள்ளது. நான் துரோகம் செய்யவில்லை என்று சொன்னவர் யார் என்பதில் இருவேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இது அஜீஸின் மனைவியுடைய கூற்று என…

விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

இவ்வசனம் (86:7) விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும்போது அது முதுகுத் தண்டுக்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது. சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில்…

ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

இவ்வசனத்துக்கு (12:42) மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக நாம் மொழி பெயர்த்துள்ளோம். நமது மொழிபெயர்ப்பு இதுதான்: அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!” என்று யூஸுஃப் கூறினார். அவர் தமது எஜமானனிடம்…

யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

அவளும் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடி விட்டார்” என்று இவ்வசனத்தில் (12:24) கூறப்படுகிறது. யூஸுஃப் நபி அவர்களின் எஜமானி தவறான நோக்கத்தில் யூஸுஃப் நபியை அணுகியபோது ஆரம்பத்தில் யூஸுஃப் நபி கட்டுப்பாடாக இருந்தாலும் ஒரு சமயத்தில் தடுமாற ஆரம்பித்தார். ஆனாலும்…

யூஸுஃபின் சகோதரர்கள்

யாகூப் நபியின் அனைத்துப் புதல்வர்களும் யூஸுஃப் நபிக்குச் சகோதரர்களாக இருந்தும், ஒருவர் மட்டும் யூஸுஃபின் சகோதரர் என்று இவ்வசனங்களில் (12:7, 8, 59, 76, 77) தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். யூஸுஃப் நபியவர்கள், எனது சகோதரர் என்று ஒருவரை மட்டும் பிரித்துப் பேசுகிறார்.…

திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்?

திருக்குர்ஆன் 12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12 ஆகிய வசனங்கள் திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகிறது. அரபு மொழிதான் சிறந்த மொழி என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. இஸ்லாத்தின் பார்வையில்…

ஐவேளைத் தொழுகைக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா?

இஸ்லாத்தில் ஐந்து வேளைத் தொழுகை கடமை என்பதை எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம். ஐந்து வேளைத் தொழுகைகள் உள்ளன என்று திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தான் ஐவேளைத் தொழுகைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக…