Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஸஃபா – மர்வா

ஸஃபா – மர்வா இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக்குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள். அப்போது குழந்தை…

யஸ்ரிப்

யஸ்ரிப் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பழைய பெயர் யஸ்ரிப். (பார்க்க திருக்குர்ஆன் 33:31) பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர்…

யஃஜூஜ், மஃஜூஜ்

யஃஜூஜ், மஃஜூஜ் இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்ணைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்து விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க…

முஸ்லிம் – முஸ்லிம்கள்

முஸ்லிம் – முஸ்லிம்கள் முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன். இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் “அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும்…

மன்னு, ஸல்வா

மன்னு, ஸல்வா மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது…

மத்யன்

மத்யன் இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகராகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

பைத்துல் மஃமூர்

பைத்துல் மஃமூர் இது வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட மாபெரும் ஆலயமாகும். (திருக்குர்ஆன் 52:4) இதில் தினமும் எழுபதினாயிரம் வானவர்கள் தொழுவர் என்றும், ஒருமுறை தொழுதவர்கள் மறுபடி அங்கே செல்ல மாட்டார்கள் என்றும், இது ஏழாம் வானத்தில் இருப்பதாகவும் நபிகள் நாயகம்…

பாபில் நகரம்

பாபில் நகரம் திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது இராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.

நபிமார்கள்

நபிமார்கள் நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள். நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை. நபிமார்கள் என்பதும்,…

துல்கர்னைன்

துல்கர்னைன் இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்த நல்ல மன்னர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இவரைப் பற்றி திருக்குர்ஆன் 18:83 முதல் 18:98 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

தமத்துவ்

தமத்துவ் மூன்று வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம். அதில் ஒரு வகை தமத்துவ் எனப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது உம்ராவுக்கு மட்டும் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்ற வேண்டும். உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு மக்காவில் உள்ளூர்வாசியைப் போல் தங்கி இருந்து…

தவாஃப்

தவாஃப் தவாஃப் என்றால் சுற்றுதல் எனப் பொருள். இஸ்லாமிய வழக்கில் தவாஃப் என்பது கஅபா ஆலயம் நமக்கு இடது கைப்பக்கம் இருக்குமாறு ஏழு தடவை சுற்ற வேண்டும். இது தான் தவாஃப் என்பது. இது ஹஜ் மற்றும் உம்ராவின் ஒரு பகுதியாகும்.

குர்பானி

குர்பானி முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும். இவ்வாறு பலியிடும் பிராணிகள் இறைவனைச் சென்றடையும் எனக் கருதக் கூடாது. ஏனெனில்…

கிப்லா

கிப்லா கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும்போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும். கஅபா ஆலயத்தையே தொழுவதாக…

காரூன்

காரூன் இவன் மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு இறைவன் கணக்கிலடங்காத செல்வங்களை வழங்கியிருந்தான். இவனது கருவூலங்களின் சாவிகள் வலிமைமிக்க ஒரு படையினர் சுமக்கும் அளவுக்கு இருந்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். செல்வத்தின் காரணமாக இவன் வரம்பு மீறியபோது இவனையும், இவனது வீட்டையும்…

கஅபா (காபா)

கஅபா முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (திருக்குர்ஆன் 3:96) ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும்.…

ஃபிர்அவ்ன்

ஃபிர்அவ்ன் யூத, கிறிஸ்தவர்களால் ‘ஃபாரோன்’ எனக் குறிப்பிடப்படும் ஃபிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாகத் திகழ்ந்தவன். தன்னையே கடவுள் என வாதிட்டவன். தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான். இவனுக்கு ஓரிறைக் கொள்கையை உணர்த்தவும், அவனது…

உம்ரா

உம்ரா மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல் உம்ரா எனப்படும். உம்ராவை எப்போதும் செய்யலாம். உம்ராவின்போது ஆண்கள் தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்தக் காலகட்டத்தில் இல்லறம் நடத்துதல், வேட்டையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்க…

இம்ரான்

இம்ரான் இவர் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை. இல்யாஸ் இவர் இறைத்தூதர்களில்…