*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 249* ||
அத்தியாயம் 42 – [அஷ்ஷுரா (ஆலோசனை செய்தல் ) 01- வசனம் 30வரை.]
_________________________________
1 ) பூமியில் உள்ளோருக்காகப் பாவ மன்னிப்புக் கோருபவர்கள் யார் ?
*வானவர்கள்* (மலக்குகள்) பூமியில் உள்ளோருக்காகப் பாவ மன்னிப்புக் கோருகின்றனர். (42:5)
_________________________________
2 ) அல்லாஹ் யாரை கண்காணிக்கின்றான் ?
*தன்னையன்றி வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரை* அல்லாஹ் கண்காணிக்கின்றான். (42:6)
_________________________________
3 ) குர்ஆன் ஏன் அரபு மொழியில் அருளப்பட்டது?
ஊர்களின் தாயான (*மக்காவில் வசிப்போ)ரையும், அதைச் சுற்றியுள்ளோரையும் எச்சரிப்பதற்காகவும்*, (ஒன்றுதிரட்டப்படும் நாள் குறித்து எச்சரிப்பதற்காகவும்) குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. (42:7)
_________________________________
4 ) மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்று இறைவன் யாரை குறிப்பிடுகிறான் ?
*யார் (மறுமையை விரும்பாமல்) இவ்வுலக விளைச்சலை (மட்டும்) விரும்புகிறாரோ*, அவருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை (42:20).
_________________________________
5 ) வழிகேட்டிலேயே உள்ளவர்கள் யார் ?
*உலகம் அழியும் நேரத்தைக் குறித்துச் சந்தேகத்தில் இருப்பவர்கள்* (தூரமான) வழிகேட்டிலேயே உள்ளனர் (42:18).
_________________________________
6 ) சாவிகள் என்று இறைவன் எதை குறிப்பிடுகிறான் ?
*வானங்கள், பூமியின்* சாவிகளை (குறிப்பிடுகிறான்) (42:12).
_________________________________
7 ) நபி(ஸல்) – ஈசா ( அலை) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் ?
*நான் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன்*” என்றும், *இறைத் தூதர்களுடைய மார்க்கம் ஒன்றே* என்றும் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி), நூல்கள்: புகாரி (3443), முஸ்லிம் (4362)).
____________________________
8 ) அல்லாஹ்வின் சான்றுகள் என்ன?
*வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவ்விரண்டிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதும்* அவனது சான்றுகளில் உள்ளதாகும் (42:29).
_________________________________
9 ) அல்லாஹ் எப்போது அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்?
*பாலைவனத்தில் தனது ஒட்டகத்தை இழந்து மீண்டும் கண்டடைந்த மனிதனை விட, தன் அடியான் பாவ மன்னிப்புக் கோரி தன்னிடம் மீளும்போது* அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் (42:25).
_________________________________
10 ) இறைவன் பெரும் அருள் என்று எதை கூறுகின்றான்?
*இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தோர் சொர்க்கப் பூஞ்சோலைகளில் இருப்பதையும், அவர்கள் விரும்பியவை அனைத்தும் அவர்களின் இறைவனிடம் கிடைப்பதையும்* இறைவன் பெரும் அருள் என்று கூறுகின்றான் (42:22).
_________________________________
11 ) இப்னு அப்பாஸ் (ரலி) எந்த உறவினர்களை மேற்கோள் காட்டினார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்கு உறவு முறையாக இருந்த *குறைஷிக் குலத்தின் எல்லாக் கிளையினரையும்* இப்னு அப்பாஸ் (ரலி) மேற்கோள் காட்டினார்கள் (42:23).
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*