*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 248* ||

அத்தியாயம் 41 – [ஃபுஸ்ஸிலத்( விவரிக்கப்பட்டது) 41- 54 வசனம் வரை. ]
_________________________________
1 ) மனிதனின் நிலையைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் ?

(உலக) நன்மைகளைக் கேட்பதில் மனிதன் சோர்வடைவதில்லை. ஆனால், அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால், அவன் நம்பிக்கையிழந்தவனாகவும் நிராசையுடையவனாகவும் ஆகிவிடுகிறான் (41:49).

துன்பத்திற்குப் பின் அருள் கிடைத்தால், “இது எனக்குரியது; யுகமுடிவு நேரம் வரும் என நான் நினைக்கவில்லை” என்று (ஆணவத்துடன்) கூறுகிறான் (41:50).
_________________________________
2 ) தூதர்களுக்குக் கூறப்பட்டது என்ன ?

(முஹம்மதே!) உமக்கு முன் தூதர்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது. (அது என்னவெனில்,) *உமது இறைவன் மன்னிப்புடையவன்; (அதே சமயம்) துன்புறுத்தும் வேதனையளிப்பவன்* (41:43).
_________________________________
3 ) நமக்கு வழங்கிய அறிவுரை என்ன ?

நமக்கு வழங்கப்பட்ட அறிவுரை (*குர்ஆன்) கண்ணியமிக்க வேதமாகும்* (41:41).

*அதன் முன்னும், பின்னும் அதில் தவறு வராது; அது புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது* (41:42).

*இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், (நோய்) நிவாரணமாகவும் இருக்கிறது* (41:44).

*யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்கே உரியது; யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது* (41:46).
_________________________________
4 ) இறைவன் எதற்கு சாட்சியாளனாக இருக்கிறான்?

(இறைவன்) ஒவ்வொரு பொருளையும் (முழுமையாக) பார்த்துக் கொண்டிருக்கிறான் (அதாவது, எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கிறான்). (41:53)
_________________________________
5 ) துன்பம் ஏற்பட்டால் மனிதன் என்ன செய்கிறான்?

அவன் நீண்ட பிரார்த்தனை செய்பவனாக இருக்கிறான். (41:51)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *