*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 247* ||
அத்தியாயம் 41 – [ஃபுஸ்ஸிலத்( விவரிக்கப்பட்டது) 1- வசனம் வரை. ]
_________________________________
1 ) நபி (ஸல்) அவர்களின் அழைப்பை முஷ்ரிக்கள் என்ன கூறி நிராகரித்தார்கள்?
*பதில்* : நீர் எதன்பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன. எங்கள் காதுகளில் செவிட்டுத்தன்மை உள்ளது. எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு தடுப்புள்ளது. எனவே (உமது கிவழியில்) நீர் செயல்படுவீராக! நாங்களும் செயல்படுகிறோம்” என அவர்கள் கூறுகின்றனர்.(41:5)
_________________________________
2 ) நபி ஸல் அவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டது என்ன?
*பதில்* : நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்களது கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு இறைச்செய்தி அறிவிக்கப்படுகிறது. (41:6)
_________________________________
3 ) ஸபா, தபூர் இவைகள் பற்றி நபி ஸல் என்ன கூறினார்கள்?
*பதில்* : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (‘ஸபா’ எனும்) கிழக்குத் திசை காற்றின் மூலம் வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ஆது’ சமுகத்தார் (‘தபூர்’ எனும்) மேற்குத் திசை காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி (1035), முஸ்லிம் (1642)
_________________________________
4 ) நரகவாசிகளுக்கு எதிராக எவைகள் சாட்சி கூறும்?
*பதில்* : அவர்களின் செவிகளும், கண்களும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறும்.(41:20)
_________________________________
5 ) எத்தகைய எண்ணங்கள் மறுமை நாளில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்?
*பதில்* : அதிகமான செயல்களை அல்லாஹ் அறிய மாட்டான் என்ற எண்ணங்கள் ( 41:22,23)
_________________________________
6 ) இஸ்லாம் குறித்து நபி ஸல் அவர்களின் எளிமையான விளக்கம் என்ன?
*பதில்* : நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். “தங்களுக்குப் பிறகு யாரிடமும்’ அல்லது “தங்களைத் தவிர வேறு யாரிடமும்’ அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கக் கூடாது” என்று வினவினேன் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “*அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!”* என்று சொன்னார்கள்
அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி),
நூல்கள்: முஸ்லிம் (62) , திர்மிதீ (2334), இப்னுமாஜா (3962), அஹ்மத் (14869)
_________________________________
7 ) ரப்புனல்லாஹ் (எங்கள் ரப்பு அல்லாஹ்தான்) என உறுதியாக இருந்தவர்களுக்கு கூறப்படும் நன்மாராயம் என்ன?
*பதில்* : “பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று (கூறி) வானவர்கள் இறங்குவார்கள்.(41:30)
_________________________________
8 ) மனிதனின் தோல்கள் மறுமை நாளில் என்ன பதில் கூறும்.
*பதில்* : ஒவ்வொரு பொருளையும் பேச வைத்த அல்லாஹ்வே எங்களையும் பேச வைத்தான். அவனே தொடக்கத்தில் உங்களைப் படைத்தான். அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என அவை பதிலளிக்கும்.(41:21)
_________________________________
9 ) மிக அழகிய அழைப்பாளர் யார் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
*பதில்* : அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, நற்செயல் செய்து, “நான் முஸ்லிம்களில் உள்ளவன்” ( எனக்கூறுபவர்) ( 41:33)
_________________________________
10 ) சைத்தான் மூலம்மாக ஊசலாட்டம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
*பதில்* : அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும்( 41:36)
_________________________________
11 ) நன்மையை கொண்டு தீமையை தடுத்து, பகைவனையும் நண்பனாக மாற்றும் இந்த பாக்கியம் யாருக்கு வழங்கபடும் என அல்லாஹ் கூறுகிறான்?
*பதில்* : பொருமையாளர், பெரும் பாக்கியம் உள்ளவர்க்கும் மட்டும் கிடைக்கும்(41:35)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*