*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 245* ||
அத்தியாயம் 40 – [அல்முஃமீன் (இறைநம்பிக்கையாளர்) 01-50 வசனம் வரை. ]
_________________________________
1 ) முஃமீன்களின் மனைவி, மக்கள் அவர்களின் மூதாதையர் ஆகியோருக்காக, பாவமன்னிப்பு தேடி சொர்க்கத்தை அல்லாஹ்விடம் வேண்டுவோர் யார்?
*பதில்* : அர்ஷைச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றி இருப்பவர்களும் (வானவர்கள்)(40:7)
_________________________________
2 ) அல்லாஹ்வின் வசனங்களில் விவாதம் செய்வது யாருடைய செயல்?
*பதில்* : இறைமறுப்பாளர்கள்(40:4)
_________________________________
3 ) ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு ஓதவேண்டிய பிரார்த்தனையில் 40:14 வசனத்தின் வார்த்தைகள் எந்த இடத்தில் வருகிறது?
*பதில்* : லா இலாஹ இல்லல்லாஹு
*முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்’* (இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனிடமே பிரார்த்திக்கிறோம்” )
_________________________________
4 ) ஃபிர்அவ்ன் யாருடைய குழந்தைகளை கொன்றான்?
*பதில்* : இறைநம்பிக்கை கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை.(40;25)
_________________________________
5 ) ஃபிர்அவ்ன் மூஸா நபியை கொல்வதற்க்கு என்ன காரணம் கூறினான்?
*பதில்* : அவர் உங்களின் மார்க்கத்தை மாற்றி விடுவார் என்றோ, இப்பூமியில் குழப்பம் விளைவிப்பார் என்றோ நான் அஞ்சுகிறேன்” என ஃபிர்அவ்ன் கூறினான்.(40:26)
_________________________________
6 ) “பூமியில் மிகைத்தோராக இருக்கும் உங்களிடம் ஆட்சி இருக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் வேதனை நம்மிடம் வந்து விட்டால் அதிலிருந்து நம்மைப் பாதுகாப்பவர் யார்?” என கேட்டவர் யார்?
*பதில்* : ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் தனது இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கை கொண்ட ஒரு மனிதர், (40:28)
_________________________________
7 ) அல்லாஹ்வை காண ஃபிர்அவ்ன் செய்த முயற்சி என்ன ? அதற்க்கு உதவியவர் யார்?
*பதில்* : உயர்ந்த மாளிகையை கட்டி அதன் மூலம் அல்லாஹ்வை காண வேண்டும் என்றான் .
உதவியவர் ஹாமான்( ஆதாரம் 40:36)
_________________________________
8 ) மூஸா நபிக்கு முன்னர் அந்த சமூகத்திற்க்கு அனுப்பட்டதாக அந்த இறையடியார் யாரை குறிப்பிடுகிறார்?
*பதில்* : யூசுப் நபி (
இதற்கு முன் உங்களிடம் யூஸுஃப் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். உங்களிடம் அவர் எதைக் கொண்டு வந்தாரோ அதில் நீங்கள் ஐயத்திலேயே ஆழ்ந்திருந்தீர்கள். (40:34)
_________________________________
9 ) நரகவாசிகள் யாரிடம் உதவி கோட்பார்கள்?
*பதில்* : நரக காவலாளிகளிடம் ( 40:49)
_________________________________
10 ) கப்ரில் காலையும் மாலையும் என்ன காட்டப்படும்?
*பதில்* : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ‘அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்ர்) உனது தங்குமிடம்’ என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (1379), முஸ்லிம் (5500)
_________________________________
11 ) கடுமையான பிரச்சாரத்திற்க்கு பின் இறைநம்பிக்கையாளர் கடைசியாக சமுதாயத்தினர் நோக்கி கூறியது என்ன?
*பதில்* : என்னுடைய காரியத்தை நான் அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன். அடியார்களை அல்லாஹ் பார்ப்பவன்”(40:44)
_________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*