*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 237* ||
அத்தியாயம் 36 யாஸீன் [(அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்-வசனங்கள் (74~83)]
________________________________
1 ) ஒரு பொருள் எப்படி படைக்கப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
ஒரு பொருளைப் படைக்க அல்லாஹ் நாடும்போது, “ஆகு” என்று கூறுவான், உடனே அப்பொருள் ஆகிவிடும் (36:82 )
________________________________
2 ) மனிதன் தனக்கு எதை எடுத்துக்காட்டாக கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
மனிதன், “எலும்புகள் மக்கிய நிலையில் இருக்கும்போது அதை மீண்டும் உயிர்ப்பிப்பவர் யார்?” என்று கேட்டு, தன்னைப் படைத்ததையே மறந்துவிட்டு அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறுகிறான். (36 78)
________________________________
3 ) மனிதன் எதற்காக இணைக் கடவுள்களை ஏற்படுத்திக் கொள்கிறான்?
*மனிதன் தங்களுக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அல்லாஹ்வையன்றி வேறு இணைக் கடவுள்களை ஏற்படுத்திக் கொள்கிறான் (36 74)
________________________________
4 ) பொருள் அறிவோம்
*نَصْرَ (நஸ்ர*): உதவி. ((36 :74)
*خَصِيمٌۭ (கஸீம்*): பகிரங்கமான தர்க்கவாதி அல்லது எதிர்வாதம் புரிபவன். (36:77)
________________________________
அத்தியாயம் 37 அஸ்ஸாஃப்ஃபாத் (அணிவகுத்து நிற்போர்)- வசனங்கள்(01~32)
5 ) சைத்தான் ஒட்டு கேட்பதில் இருந்து இறைவன் எப்படி விரட்டி அடித்தான்?
ஒளிரக்கூடிய தீப்பிளம்புகளால் எறியப்பட்டு விரட்டப்பட்டனர். (37:10)
________________________________
6 ) வானத்தை எப்படி அழகுபடுத்தியதாக இறைவன் கூறுகிறான்?
*நட்சத்திரங்கள் எனும் அலங்காரம்* மூலம் தான் அழகுபடுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். (37:6)
________________________________
7 ) எதன் மீதெல்லாம் இறைவன் சத்தியம் செய்கிறான்?
இறைவன் பின்வருவனவற்றின் மீது சத்தியம் செய்கிறான்:
*அணி அணியாய் நிற்போர் மீது* (37: 1)
*கடுமையாக விரட்டுவோர் மீது* (37: 2)
*போதனையைக் கூறுவோர் மீது* (37: 3)
________________________________
8 ) *அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பார்த்தும் இணைவைப்பாளர்கள்* என்ன செய்தனர்?
அல்லாஹ்வின் அத்தாட்சிகளை இவர்கள் கண்டபோதும் கேலி செய்தனர். மேலும், *இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை* என்று கூறினர். (37:14-15)
________________________________
9 ) *ஹலக்னாகும் மின் தீனின்* என்ற சொல் எந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது?
*ஹலக்னாகும் மின் தீனின்* (خَلَقْنَاهُم مِّن طِينٍ) என்ற சொல், அதாவது *இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் படைத்தோம்* (37:11)
________________________________
10 ) மறுமை நாளில் அநியாயக்காரர்களின் கூட்டாளிகள் அவர்களைப் பார்த்து *நீங்கள் தான் எங்களை வழிகெடுத்தீர்கள்* என்று சொல்லும் போது அந்த அநியாயக்காரர்கள் அவர்களுக்கு என்ன பதிலளிப்பார்கள்?
அவர்கள், *இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள். நாங்கள் உங்களை வழிகெடுத்தோம், நாங்களும் வழிகெட்டவர்களாகவே இருந்தோம்* என்று பதிலளிப்பார்கள்
(37:29-30, 37:32)
________________________________
11 ) பொருள் அறிவோம்: مُسْتَسْلِمُونَ (முஸ்தஸ்லிமூன்), تَسَآءَلُونَ (தஸாஅலூன்)
* مُسْتَسْلِمُونَ (முஸ்தஸ்லிமூன்): சரணடைந்தவர்கள்
* تَسَآءَلُونَ (தஸாஅலூன்): விசாரித்துக் கொள்வார்கள் (அல்லது கேள்வி கேட்பார்கள்)
(37:26-27)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*