அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 216* ||
அத்தியாயம் 29 – [ *அல்அன்கபூத் (சிலந்தி)* – வசனங்கள் (21~50)]
________________________________
_________________________________
1 ) *தன் சமுதாயத்தினருக்கு எதிராக லூத் நபி இறைவனிடம் என்ன பிரார்த்தனை செய்தார்கள்?* (அரபு + தமிழ் )
**رَبِّ ٱنصُرْنِى عَلَى ٱلْقَوْمِ ٱلْمُفْسِدِينَ*
*ரப்பி உன்ஷூர்னி அலல் கவ்மில் முப்ஃஸிதீன்*
*என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக*! (29:30)
_________________________________
2 ) *இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் இவ்வுலகில் வழங்கிய அருட்கொடைகள்* யாவை?
இப்ராஹீம் நபிக்கு *இஸ்ஹாக் (மகன்), யாகூப்* (பேரன்) ஆகியோரை வழங்கினான். மேலும், அவர்களது *வழித்தோன்றல்களில் நபித்துவத்தையும், வேதத்தையும்* வழங்கினான். (29:27)
*அல்லாஹ், இப்ராஹீம் நபியை நெருப்பிலிருந்து காப்பாற்றினான்*. (29:24)
_________________________________
3 ) லூத் நபி, தன் சமுதாயத்தினரின் பாவங்களைச் சுட்டிக்காட்டியபோது, *அவர்கள் ஆணவத்துடன் கேட்டது என்ன*?
நீர் உண்மையாளராக இருந்தால் *அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக!* என்று ஆணவத்துடன் கேட்டனர். (29:29)
_________________________________
4 ) *இப்ராஹீம் நபியின் பிரச்சாரத்திற்கு, அவரின் சமுதாய மக்கள் கூறிய பதில்* என்ன?
*இவரைக் கொல்லுங்கள்! அல்லது (தீயிட்டுப்) பொசுக்குங்கள்!* என்பதே அவர்களின் பதிலாக இருந்தது. (29:24)
_________________________________
5 ) *பாவம் செய்த சமுதாயங்களுக்கு அல்லாஹ் வழங்கிய நான்கு வகையான தண்டனைகளாக* மேற்கண்ட வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை?
1. *கல் மழை அனுப்புதல்*.
2. *பெரும் சப்தத்தால் தாக்குதல்*.
3. *பூமிக்குள் உயிருடன் புதையச் செய்தல்.*
4. *நீரில் மூழ்கடித்தல்*. (29:40)
_________________________________
6 ) *ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினர் வழிகெட்டுப் போனதற்குக்* காரணம் என்ன?
ஷைத்தான் அவர்களுடைய (*தீய) செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை நல்வழியிலிருந்து தடுத்தான்*. (29:38)
_________________________________
7 ) *ஷுஐப் நபி தன் சமுதாயத்தினருக்குக் கூறிய மூன்று முக்கியக் கட்டளைகள்* யாவை?
1. *அல்லாஹ்வை வணங்குங்கள்*.
2. *இறுதி நாளை நம்புங்கள்*.
3. *பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்*. (29:36)
_________________________________
8 ) *அல்லாஹ் தனக்கு அநீதி இழைக்கும் பழக்கமில்லை* என்பதை எவ்வாறு தெளிவுபடுத்துகிறான்?
*அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்* என்று கூறி, *அவர்கள் செய்த பாவத்தின் காரணமாகவே தண்டிக்கப்பட்டனர்* எனத் தெளிவுபடுத்துகிறான். (29:40)
_________________________________
9 ) தொழுகையின் பயன்களைக் கூறிய பின், அல்லாஹ் *மிக முக்கியமானது அல்லது மிகப்பெரியது* என்று எதைக் குறிப்பிடுகிறான்?
*அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது* (وَلَذِكْرُ ٱللَّهِ أَكْبَرُ) என்று குறிப்பிடுகிறான். (29:45)
__________________________________
10 ) *குர்ஆனில் கூறப்படும் உவமைகளை (முன்னுதாரணங்களை) யார் சரியாகப் புரிந்துகொள்வார்கள்* என அல்லாஹ் கூறுகிறான்?
(*அறிவுடையவர்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள்*)
*அறிவுடையோரைத் தவிர* (إِلَّا ٱلْعَـٰلِمُونَ) மற்றவர்கள் அதை விளங்க மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (29:43)
__________________________________
11 ) *தொழுகையை நிலைநாட்டுவதால் கிடைக்கும் இரண்டு முக்கியப் பயன்கள்* யாவை?
A) *வெட்கக்கேடான காரியங்களை விட்டும் தடுக்கும்.*
B) *தீமையை விட்டும் தடுக்கும்*. (29:45)
__________________________________
12 ) *வேதமுடையோருடன் (யூதர்கள், கிறிஸ்தவர்கள்) தர்க்கம் செய்யும்போது, முஸ்லிம்கள் கூற வேண்டிய அடிப்படை* வார்த்தைகள் என்ன?
*எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்* என்று கூற வேண்டும். (29:46)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*
_________________________________