அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 214* ||
அத்தியாயம் 28 – அல்கஸஸ் (வரலாறு) 51-80 வசனம் வரை
________________________________
1 ) யாரை மரண நேரத்தில் கலிமாவைச் சொல்ல நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்?
நபி (ஸல்) அவர்கள், *தனது பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களை*, அவரின் மரணத் தருவாயில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவைச் சொல்லுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால், அவர் அதை ஏற்காமலேயே மரணித்துவிட்டார்.
இதன் பின்னணியிலேயே, “நீர் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்” என்ற (28:56) வசனம் அருளப்பட்டது.
(புகாரி 3884, முஸ்லிம் 39)
________________________________
2 ) 28:54 – ல் குறிப்பிடப்படும் *இரண்டு முறை கூலி* என்பது யாருக்கு?
இந்த வசனத்தில் குறிப்பிடபடுபவர்கள் *வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளர்கள்*
அவர்கள், குர்ஆனுக்கு முன்பு *தங்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தையும் நம்பி, பின்னர் குர்ஆன் அருளப்பட்டபோது, அதையும் (உண்மை என அறிந்து) நம்பினார்கள்*.
அவர்கள் *தங்கள் முந்தைய வேதத்தை நம்பியதற்காக ஒரு கூலியும், குர்ஆனை நம்பியதற்காக மற்றொரு கூலியும்* என இரண்டு முறை கூலி வழங்கப்படுவார்கள்.
(28:52-54 மற்றும் புகாரி 3011)
மேலும் கூடுதலாக *அடிமைபெண்னை வளர்த்து ஆளாக்கியவர், அடிமை பெண்*
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்கள்: புகாரி (3011), முஸ்லிம்(241)
________________________________
3 ) தூதர்களுக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? எனக் கேட்கும்போது குற்றவாளிகளின் நிலை என்ன?
அவர்களுக்கு (பதில் சொல்லக்கூடிய) *எல்லாச் செய்திகளும் மறைந்துவிடும்* (அவர்களால் பதில் கூற இயலாது).
(குழப்பத்தில்) அவர்கள் *ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.* (28:66)
________________________________
4 ) நாம் படித்துக் கொண்டிருக்கும் இந்த (அல்-கஸஸ்) அத்தியாயத்தில், *மூஸா நபியின் கொள்கையை ஏற்காத மூன்று நபர்களின்* பெயரை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்கள் யார்?
(a) *ஃபிர்அவ்ன்* (மன்னன்)
(b) *ஹாமான்* (ஃபிர்அவ்னின் அமைச்சர்)
(c) *காரூன்* (மூஸாவின் சமூகத்தைச் சார்ந்த பெரும் செல்வந்தன்)
(28:8, 38, 76)
________________________________
5 ) *காரூனுக்கு சமுதாயத்தினர் கூறிய அறிவுரை என்ன?*
• *ஆணவம் கொள்ளாதே! (ஏனெனில்) ஆணவக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.*
• *அல்லாஹ் உனக்கு வழங்கிய செல்வத்தின் மூலம் மறுமை வீட்டைத் தேடிக்கொள்.*
• *இவ்வுலகில் உனது பங்கை மறந்து விடாதே.*
• *அல்லாஹ் உனக்கு உதவியது போல நீயும் (பிறருக்கு) உதவி செய்.*
• *பூமியில் குழப்பம் விளைவிக்க விரும்பாதே.* (28:76-77)
________________________________
6 ) அல்லாஹ் பகலைக் குறிப்பிடும்போது ‘*வெளிச்சம்*’ என்கிறான். இரவைக் குறிப்பிடும்போது ‘*இருட்டு*’ எனக் கூறாமல் வேறு சொல்லைப் பயன்படுத்துகிறான். அது என்ன?
அல்லாஹ் இரவைக் குறிப்பிடும்போது, அதில் *மனநிம்மதி பெறுதல் (ஓய்வெடுத்தல்)* என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். (28:72, 73)
________________________________
7 ) உலக வாழ்க்கையை விரும்பியோர்க்கு *இல்மு (கல்வியறிவு)* கொடுக்கப்பட்டோர் என்ன கூறினார்கள்?
கல்வியறிவு கொடுக்கப்பட்டவர்கள், *உங்களுக்குக் கேடுதான்! இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோருக்கு அல்லாஹ்வின் கூலியே மிகச் சிறந்ததாகும். பொறுமையாளர்களைத் தவிர (வேறெவருக்கும்) அது கொடுக்கப்பட மாட்டாது* என்று கூறினார்கள். (28:80)
________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*