அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 196* ||

அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (61~64)
_______________________________
1 ) *அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வோருக்கான* எச்சரிக்கை என்ன?

அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வோர் *தமக்குச் சோதனை ஏற்படுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ள வேண்டும்*. (24:63)

2 ) *உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள்*?

உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் *அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவார்கள்*. அவர்கள் பொதுக் காரியத்திற்காக *தூதருடன் கூடி இருக்கும்போது, அனுமதி பெறாமல் வெளியேற மாட்டார்கள்*. (24:62)

3 ) *உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட வீடுகள் யாவை?*

* உங்கள் *சொந்த வீடுகள்*
* உங்கள் *தந்தையரின் வீடுகள்*
* உங்கள் *அன்னையரின் வீடுகள்*
* உங்கள் *சகோதரர்களின் மற்றும் சகோதரிகளின்* வீடுகள்
* உங்கள் *தந்தையின் சகோதரர்கள்* மற்றும் *சகோதரிகளின்* வீடுகள்
* உங்கள் *தாயின் சகோதரர்கள்* மற்றும் *சகோதரிகளின்* வீடுகள்
* *எவற்றின் சாவிகளை நீங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்களோ* அந்த வீடுகள்
* உங்கள் *நண்பர்களின்* வீடுகள் (24:61)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *