அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 193* ||

அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (31~40)]
__________________________________
1 ) *இறையில்லங்கள் (மஸ்ஜிதுகள்) எழுப்பப்பட வேண்டும்* என்று அல்லாஹ் கூறியதற்கான *இரண்டு முக்கிய நோக்கங்கள்* யாவை?

(a) *அவற்றில் அவனது பெயர் நினைவுகூறப்பட வேண்டும்*.

(b) அங்கு *காலையிலும் மாலையிலும் அவனைப் போற்றித் துதிக்க* வேண்டும். (24:36)
__________________________________
2 ) அல்லாஹ்வைப் போற்றும் *உண்மையான அடியார்களின் பண்பு என்ன?* எந்தச் செயல்கள் அவர்களை *அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசை திருப்புவதில்லை?*

*உள்ளங்களும், பார்வைகளும் நிலைதடுமாறும் ஒருநாளுக்கு அவர்கள் அஞ்சுவார்கள்*. இதுவே அவர்களின் *முக்கியப் பண்பாகும்*

*வியாபாரமோ* அல்லது *கொடுக்கல் வாங்கலோ, அம்மனிதர்களை அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையை நிலைநிறுத்துவதிலிருந்தும், ஸகாத் கொடுப்பதிலிருந்தும் திசை திருப்பாது*. (24:37)
__________________________________
3 ) நபிகளார் *இரவு நேரத்தில் தொழுவதற்காக எழும்போது என்ன துஆ* ஓதினார்கள்?

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்:

*இறைவா! உனக்கே புகழனைத்தும்.*

*நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்*.

*உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய்.*

*உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மை*.

*இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்*;

*உன் சான்று களைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன்*.

ஆகவே, *நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக*!

*நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.*

இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி (7385), முஸ்லிம் (1417)
__________________________________
4 ) *பெண்கள் தமது அலங்காரத்தை யாருக்கு வெளிப்படுத்தலாம்*?

*தமது கணவர்*

*தமது தந்தையர்*

*தமது மகன்கள்*

*தமது சகோதரர்கள்*

*தமது சகோதரர்களின் மகன்கள் (சகோதரப் புதல்வர்கள்)*

*தமது சகோதரிகளின் மகன்கள் (சகோதரிப் புதல்வர்கள்)*

*தம்மைப் போன்ற (இறைநம்பிக்கையுள்ள) பெண்கள்*

*பெண்கள் மீது விருப்பமில்லாத பணியாளர்கள்*

*பெண்களின் அந்தரங்கங்களை அறியாத சிறுவர்கள்* (24:31)
__________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *