அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 192* ||

அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (21~30)]
_________________________________
1 ) *பிறர் வீடுகளுக்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்* என்ன? *மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால்* என்ன செய்ய வேண்டும்?

பிறர் வீடுகளில் நுழையும்போது, அங்குள்ளவர்களுக்கு *ஸலாம் கூறி, அனுமதி பெற்ற பிறகே நுழைய வேண்டும்*. ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அவர் *திரும்பிச் சென்று விட வேண்டும்*.

(நூல்: புகாரி 6245, 24:27-28)
___________________________________
2 ) நபி (ஸல்) அவர்கள் கூறியபடி, *சாலையின் உரிமைகள்* யாவை?

*சாலையின் உரிமைகள் ஐந்து*:

1. (*அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வது*.

2. (யவருக்கும்) *துன்பம் தராமலிருப்பது*.

3. *ஸலாமுக்குப் பதிலுரைப்பது*.

4. *நன்மை புரியும்படி கட்டளையிடுவது*.

5. *தீமையிலிருந்து தடுப்பது*. (புகாரி 2465)

3 ) மறுமை நாளில், ஒரு *அடியானுக்கு எதிராக அவனது உடல் உறுப்புகள்* எவ்வாறு சாட்சி சொல்லும்?

மறுமை நாளில், அடியானின் வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது (மற்ற) உறுப்புகளிடம், *பேசுங்கள்* என்று இறைவன் கூறுவான். உடனே அவனது *நாவுகளும், கைகளும், கால்களும்* அவன் செய்த செயல்களைப் பற்றி அவனுக்கு எதிராகவே சாட்சி சொல்லும்.

(நூல்: முஸ்லிம் 5679, 24:24)
___________________________________
4 ) நபி (ஸல்) அவர்கள் கூறிய அழித்தொழிக்கும் *ஏழு பெரும் பாவங்கள்* யாவை?

நபி (ஸல்) அவர்கள் கூறிய அழித்தொழிக்கும் *ஏழு பெரும் பாவங்கள்*:

1. *அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது*.

2. *சூனியம் செய்வது.*

3. *நியாயமின்றி ஒரு உயிரைக் கொல்வது.*

4. *வட்டி உண்பது*.

5. *அநாதைகளின் செல்வத்தை உண்பது*.

6. *போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது*.

7. அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, *கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது*.

(நூல்: புகாரி 2766)
___________________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *