அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 190* ||

அத்தியாயம் 24 [*அந்நூர்* (ஒளி) வசனங்கள் (01~10)]

1) *விபச்சாரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு* (திருமணம் ஆனவர் & திருமணம் ஆகாதவர்) நபிகளார் கொடுத்த தண்டனை என்ன?

நபிகளார் (ஸல்) அவர்கள் விபச்சாரக் குற்றத்திற்கு, குற்றம் செய்தவர் திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்பதைப் பொறுத்து வெவ்வேறு தண்டனைகளை வழங்கினார்கள்.

\\*திருமணம் ஆகாதவர்*\\

இவர்களுக்கு *நூறு கசையடிகள்* மற்றும் *ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்துதல்* தண்டனையாகும்.

(புகாரி 6828, முஸ்லிம் 3502). இது திருக்குர்ஆனின் வசனத்தையும் (24:2) உறுதிப்படுத்துகிறது.

\\*திருமணம் ஆனவர்*\\

இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு *கல்லெறி தண்டனை (ரஜ்ம்)* வழங்கப்படும்.

(புகாரி 6828, முஸ்லிம் 3502)

*மக்களின் முன்னிலையில் இந்தத் தண்டனை நடைபெற வேண்டும்* (24:2).
_________________________________
2 ) எவர்கள் *கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி* (அதை நிரூபிக்க *நான்கு* சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் *எண்பது கசையடி* அடியுங்கள். (24:4)
_________________________________
3 ) *’லிஆன்’* சட்டம் (لعان) பற்றிய குறிப்பு எழுதுக.

*’லிஆன்’* என்பது ஒரு கணவன் தன் மனைவி மீது விபச்சாரக் குற்றம் சுமத்தும் போது*, அவனிடம் *நான்கு சாட்சிகள் இல்லாத பட்சத்தில் இஸ்லாம் கூறும் ஒரு *சத்தியப் பிரமாண* முறையாகும்.

*\\லிஆன் செயல்முறை*\\

*கணவனின் சத்தியம்*: கணவன், *தான் உண்மையாளர்களில் உள்ளவன்*’ என்று அல்லாஹ்வின் மீது *நான்கு முறை* சத்தியம் செய்ய வேண்டும். (24:6)

ஐந்தாவது முறையாக, ‘*தான் பொய்யர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்*’ என்று கூற வேண்டும். (24:7)

\\*மனைவியின் மறுப்பு*\\

கணவனின் குற்றச்சாட்டை மறுக்கும் மனைவி, ‘*அவன் பொய்யர்களில் உள்ளவன்*’ என்று *நான்கு முறை* அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். இது அவளை விட்டும் தண்டனையைத் தடுத்து விடும். (24:8)

ஐந்தாவதாக, ‘*அவன் உண்மையாளர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்*’ என்று அவள் கூற வேண்டும். (24:9)

\\*லிஆனின் விளைவுகள்*\\

அவர்களுக்கு இடையேயான *திருமண பந்தம் முறிந்துவிடும்*. (புகாரி 4745)

*தந்தை அக்குழந்தைக்குப் பொறுப்பாக மாட்டார்*. (புகாரி 4745)

லிஆன் செய்தால், *குழந்தை தாயுடனே இருக்கும்*. புகாரி 5315).
_____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *