அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 175* ||

அத்தியாயம் 21 *அல் அன்பியா-நபிமார்கள்*  (வசனங்கள் 91- 112வரை)

1 ) மரியம் (அலை) அவர்களின் சிறப்பு…

அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார் (21:91)

அல்லாஹ் அவரிடம் தன் உயிரிலிருந்து ஊதினான் (21:91)

அவரையும் அவரது மகனையும் (ஈசாவையும்) அகிலத்தாருக்கு ஒரு சான்றாக ஆக்கினான் (21:91)

2  ) யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் பற்றி…

யுக முடிவின் அடையாளமாக அவர்கள் ஒவ்வொரு மேட்டுப்பகுதியிலிருந்தும் விரைந்து வருவார்கள் (21:96)

துல்கர்னைன் அவர்களுக்கு எதிராக ஒரு தடுப்புச்சுவரை எழுப்பினார் (18:94-98)

நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வருகை ஒரு தீமையாக குறிப்பிட்டார்கள் (புகாரி 3346, முஸ்லிம் 5520)

யுக முடிவின் பத்து அடையாளங்களில் அவர்களும் ஒன்று (முஸ்லிம் 5559)

அவர்கள் தபரிய்யா ஏரியின் நீரை குடித்து விடுவார்கள் (முஸ்லிம் 5629)

3 ) அழிக்கப்பட்ட கிராமத்தின் மக்கள் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப முடியுமா?

*முடியாது*. எந்த ஊரை அல்லாஹ் அழித்து விட்டானோ, அவர்கள் இவ்வுலகிற்குத் திரும்பி வர மாட்டார்கள் என தடை விதிக்கப்பட்டுள்ளது (21:95)

4 ) *உலகத்தின் முடிவு எப்படி வரும்?*

  *அல்லாஹ் வானத்தை படைப்பை தொடங்கியது போலவே சுருட்டுவதன் மூலம் மீட்டெடுப்பான்* (21:104)

மக்கள் காலணியில்லாதவர்களாக, நிர்வாணமாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக எழுப்பப்படுவார்கள் (புகாரி 3447, முஸ்லிம் 5493)

  

முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் (புகாரி 3447, முஸ்லிம் 5493)

5 ) *யார் இறுதியில் பூமியை உரிமையாகப் பெறுவார்கள்?**

   

*அல்லாஹ்வின் நல்லடியார்கள் பூமிக்கு வாரிசாவார்கள்* என்று ஸபூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (21:105)

6)  *நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன?*

‎قَـٰلَ رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَـٰنُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ⭘

என் இறைவனே! உண்மையைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக!” என்றும், “நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பதற்கு எதிராக அளவிலா அருளாளனாகிய எங்கள் இறைவனே உதவி தேடப்படுபவன்” என்றும் (இறைத்தூதர்) கூறினார். (21:112)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *