அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 173* ||
அத்தியாயம் 21 *அல் அன்பியா-நபிமார்கள்* (வசனங்கள் 51- 70 வரை)
1 ) *அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த நன்மை* என்ன?
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு *நேர்வழியை வழங்கினான்* (21: 51).
2) *இப்ராஹீம் (அலை) அவர்கள் சிலைகளை எவ்வாறு அழித்தார்கள்*?
இப்ராஹீம் (அலை) அவர்கள் *சிலைகளைத் துண்டு துண்டாக உடைத்தார்*, ஆனால் பெரிய சிலையை மட்டும் விட்டுவைத்தார் (21: 58).
3) *மக்கள் சிலைகளை வழிபட்டதற்கான காரணம்* என்னவென்று கூறினார்கள்?
மக்கள், *தங்கள் முன்னோர்கள் சிலைகளை வணங்கியதாகக் கூறினர்* (21: 52-53).
4 ) *இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் நலன் காக்கும் விஷயத்தில்* சொன்னவை என்ன?
“*நான் நோயுற்றிருக்கின்றேன்*” என்று கூறியது (திருவிழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காக).
*இவர்களில் பெரியதான இந்தச் சிலைதான் இதைச் செய்தது* என்று கூறியது (சிலைகளை உடைத்த பின்பு).
(சாரா அலைஹிஸலாம் குறித்து) *என் சகோதரி* என்று கூறியது (கொடுங்கோல் மன்னனிடமிருந்து பாதுகாப்புக்காக).
*(21:63), (புகாரி 3358, முஸ்லிம் 4726)*
6 ) *நெருப்புக்கு இட்ட கட்டளை* என்ன?
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!” என அல்லாஹ் கட்டளையிட்டார்.* (21:69)*
6 ) *இப்ராஹீம் (அலை) அவர்கள் வழிபாட்டு சிலைகளைக் குறித்து என்ன கூறினார்?*
*”இதைச் செய்தது இவற்றிலுள்ள இந்தப் பெரிய சிலைதான். அவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேளுங்கள்*!” எனப் பதிலளித்தார். (21:63)
*அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சிறிதும் நன்மையோ, தீமையோ செய்யாதவற்றை வணங்குகிறீர்களா? உங்களுக்கும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?* (21:66-67).
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*