அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 170* ||

அத்தியாயம் 20 – தாஹா (طٰهٰ‌)
111- 135 வசனங்கள் வரை.

1 ) *அல்லாஹ், ஆதமிடம் விடுத்த எச்சரிக்கை* என்ன?

அல்லாஹ் ஆதமிடம், இப்லீஸ் *அவருக்கும் அவரது மனைவிக்கும் எதிரி என்று எச்சரித்து*, அவன் அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிடக் கூடாது என்று கூறினான். அவ்வாறு நடந்தால், ஆதம் *பாக்கியமிழந்தவராகி விடுவார்* என்று எச்சரித்தான்.
(20:117)

2 ) நபிக்கு, *அல்லாஹ் கற்றுக்கொடுத்த பிரார்த்தனை என்ன?*

அல்லாஹ் நபிக்கு, *என் இறைவனே! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!* என்று பிரார்த்திக்க கற்றுக்கொடுக்கிறான்.
(20:114)

3 ) *சொர்க்கத்தில் ஆதம்(அலை) அவர்களுக்கு எவ்வாறு வசதிகள் அளிக்கப்பட்டன?*

சொர்க்கத்தில் ஆதம் *பசி, நிர்வாணம், தாகம், அல்லது வெயிலின் தொல்லை ஆகியவற்றை அனுபவிக்காதவாறு வசதிகள் அளிக்கப்பட்டன*.
(20:118-119)

4 ) *நெருக்கடியான வாழ்க்கை* என்பதன் கருத்து என்ன ?

நெருக்கடியான வாழ்க்கை என்பதன் கருத்து…
*நெருக்கடியான வாழ்க்கை* (20:124) என்பது *கப்ரின் வேதனையைக்* குறிக்கிறது. இது *இறைவேதத்தைப் புறக்கணிப்பவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் கிடைக்கும் கஷ்டமான நிலையைக்* குறிக்கின்றது.
(அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஹாகிம்: 3439)

5 ) *ஃபஜ்ர்* மற்றும் *அஸ்ர்* தொழுதவருக்கான சிறப்பு என்ன?
ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர் *நரக நெருப்பில் ஒருபோதும் நுழைய மாட்டார்*.

*இந்தத் தொழுகைகள் இறைவனின் புகழை உயர்த்துவதற்கு முக்கியமானவை*.
(20:130, 50:39; அறிவிப்பவர்: உமாரா பின் ருஐபா, முஸ்லிம்: 1115; ஜரீர் பின் அப்துல்லாஹ், புகாரி: 554, முஸ்லிம்: 1113)

6 ) *பார்வையற்றவனாக எழுப்பப்படுவோரிடம்* அல்லாஹ் என்ன கூறுவான்?
அல்லாஹ் கூறுவான்: *நமது வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவற்றை மறந்தாய். அதேபோல் இன்று நீ மறக்கப்பட்டு விட்டாய்.*
(20:126)

7 ) *இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள்* எவை?

இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் *பூமியின் வளங்களான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள்*, மற்றும் *பயிர் வகைகள்* ஆகும்

(20:131), (புகாரி 1465, முஸ்லிம் 1900).

8 ) வசனம் *132 ல் தொழுகை குறித்து* என்ன அறிவுறுத்துகிறது?

*குடும்பத்தினருக்கு தொழுகையை ஏவ வேண்டும்*,

*அதைக் கடைப்பிடிப்பதில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்*, மற்றும்

*வாழ்வாதாரத்தை இறைவனே அளிப்பான் என்பதை உணர வேண்டும்*

(20:132), (தப்ரானீ – அவ்ஸத் 886).

9 ) *எச்சரிக்கை இல்லாமல் தண்டனை வந்திருக்க*, மக்கள் என்ன கூறியிருப்பார்கள்?

*எங்கள் இறைவனே! எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே*!” எனக் கூறியிருப்பார்கள் (20:134).
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *