அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 169* ||
அத்தியாயம் 20 – தாஹா (طٰهٰ)
81- 110 வசனங்கள் வரை.
1 ) *மூஸா (அலை) தூர் மலைக்கு சென்றபோது, அவருடைய சமூகத்தில் என்ன நடந்தது?*
மூஸா (அலை) தூர் மலைக்கு சென்றபோது, *ஸாமிரீ இஸ்ராயீல் மக்களை வழிகெடுத்து, ஆபரணங்களால் காளைக் கன்று வடிவில் சிலையை உருவாக்கினான்*. அது மாட்டின் சப்தத்தை எழுப்பியது. மக்கள் அதை கடவுளாக வணங்கி, “*இதுவே உங்களுக்கும் மூஸாவுக்கும் கடவுள்*” எனக் கூறினர் (20: 85, 87-88).
2 ) *அல்லாஹ் இஸ்ராயீல் மக்களுக்கு என்ன நன்மைகள் அளித்தான்*?
அல்லாஹ் இஸ்ராயீல் மக்களுக்கு *தூய்மையான உணவு* மற்றும் வாழ்வாதாரங்களை வழங்கினான். மேலும், அவர்களுக்கு *அழகான வாக்குறுதியை அளித்து, அவர்களை நேர்வழியில் நடத்துவதற்கு மூஸா (அலை) மூலம் வழிகாட்டுதல் அளித்தான்* (20: 81, 86).
3 ) *இஸ்ராயீல் மக்கள் எந்த பாவத்தைச் செய்தார்கள்?*
இஸ்ராயீல் மக்கள், *ஸாமிரீ உருவாக்கிய காளைக் கன்று சிலையை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த பாவத்தைச் செய்தனர்*. இது மூஸாவுடன் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்யும் செயலாகும் (20: 88-89).
4 ) *மூஸா நபி கேட்ட கேள்விக்கு ஹாரூன் நபி என்ன விளக்கம் தருகிறார்*?
ஹாரூன் நபி, மூஸா நபியின் கோபத்திற்கு பயந்து, *தனது தாடியையும் தலையையும் பிடிக்க வேண்டாம்* எனக் கேட்டுக்கொள்கிறார்.
மேலும், *இஸ்ராயீல் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி, மூஸாவின் வார்த்தையை எதிர்பார்க்காமல் செயல்பட்டதாக மூஸா குற்றம் சாட்டுவார்* என அஞ்சியதாக விளக்குகிறார் (20:94).
5 ) வசனம் 97-இல் “لَا مِسَاسَ” (லாமிஸாஸ்) என்பதன் விளக்கம் என்ன?
“*லாமிஸாஸ்*” என்றால் “*தீண்டாதே*” அல்லது “*ஒதுங்கி இரு*” என்பதாகும்.
இது ஸாமிரிக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறிக்கிறது, அதாவது இவ்வுலக வாழ்க்கையில் அவனை மக்கள் தவிர்க்க வேண்டும்,
*அவனுடன் தொடர்பு கொள்ளக் கூடாது* என்பதை உணர்த்துகிறது (20:97).
6 ) *இஸ்ராயீல் மக்கள் பொற்காளையைக் குறித்து என்ன சொன்னார்கள்*?
இஸ்ராயீல் மக்கள், *மூஸா திரும்பி வரும் வரை பொற்காளையை வணங்குவதில் உறுதியாக இருப்போம்* என்று கூறினர் (20:91).
7 ) *மலைகளைப் பற்றி அல்லாஹ்* என்ன கூறுகிறான்?
அல்லாஹ், மறுமை நாளில் *மலைகளைத் தூள் தூளாக்கி, அவற்றைச் சமதளமான பொட்டலாக்கி விடுவான்* என்று கூறுகிறான் (20: 105-106).
8 ) *இரகசியமாக என்ன பேசிக் கொள்வார்கள்*?
அவர்கள், “(*உலகில்) பத்து (நாட்கள்) தவிர நீங்கள் தங்கியிருக்கவில்லை*” என்று தமக்கிடையே இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள். அறிவில் சிறந்தவர்கள், “*ஒரு நாள் மட்டுமே தங்கியிருந்தீர்கள்*” என்று கூறுவார்கள் (20: 103-104).
__________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*