அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 166* ||

அத்தியாயம் 20 – தாஹா (طٰهٰ‌)
01- 30 வசனங்கள் வரை.

1) *அல்லாஹ்வுக்கு சொந்தமானவை* எவை?

*வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டிற்கு இடைப்பட்டவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும்* (20:6)

2) *அல்லாஹ் எங்கே இருக்கிறான்*?

*அர்ஷின்மீது* (20:5)

3 ) மூஸா அலை அவர்கள் நெருப்பை கொண்டுவர எங்கு போனார்கள்?

*துவா* எனும் தூய பள்ளத்தாக்கு (20:12)

4 ) *மூஸா அலை அவர்கள் கைத்தடியை கொண்டு என்ன செய்வதாக கூறினார்கள்*?

இதன்மீது நான் *ஊன்றி நிற்பேன்*. இதைக் கொண்டு எனது *ஆடுகளுக்கு இலை பறிப்பேன்*; இதனால் எனக்கு -8வேறுசில பயன்களும் இருக்கின்றன* என்று அவர் கூறினார். (20:18)

5 ) *வயஸ்ஸிர்லி அம்ரி* இதன் அர்த்தம் என்ன?

*என் காரியத்தை எனக்கு எளிதாக்குவாயாக*! (20:25)

6 ) *மூஸா (அலை) அவர்கள் யாரை உதவியாள(வசீ)ராக* அல்லாஹ்விடம் கேட்டார்கள்?

மூஸா அலை அவர்களின் குடும்பத்தை சார்ந்த *ஹாருன் (அலை*) அவர்களை (20:29)

7 ) *கைத்தடி பாம்பாக மாறியது* மற்றொரு அத்தாட்சி என்ன ?

*கையை அக்குள் பகுதியில் சேர்த்து வைத்து போது அது மாசற்ற வெண்மையாக வெளிபட்டது* (20:22)
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *