அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 163* ||
அத்தியாயம் 19 – மர்யம் , *01- 33* வசனங்கள் வரை.
1 ) *ஸக்கரியா ( அலை) அவர்கள் எதற்க்காக ஒரு வாரிசு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்*?
*எனக்குப் பின்னால் உறவினர்களைப் பற்றிப் பயப்படுகிறேன்*. (19:5)
மேலதிக விளக்கமாக…
ஸக்கரிய்யா நபி (19:5) தமக்கு வாரிசு வேண்டி பிரார்த்தித்தது *சொத்துக்காக அல்ல, ஆன்மிகப் பணியைத் தொடர ஒரு சந்ததிக்காகவே*.
*நபிமார்களின் சொத்துக்கு பிள்ளைகள் வாரிசாக முடியாது* என நபிமொழி கூறுகிறது (புகாரீ 2862, 2863, 3435, 3730, 3913).
2 ) *மர்யம் (அலை) முன் ஜுப்ரில் எந்த உருவத்தில் தோன்றினார்கள்*?
அவர் *முழு மனிதராக* அவருக்குக் காட்சியளித்தார்.(19:17)
3 ) நபிமார்கள் மற்றும் அல்லாஹ் பொருந்தி கொண்ட நல்லடியார்கள் எந்த ஒரு விசயத்தையும் அது அல்லாஹ்விடம் இருந்து வந்தாலும் *மனிதனால் முடியது என இருக்கும் போது எப்படி*? என்ற கேள்வி கேட்டுதான் உறுதிபடுத்தி உள்ளார்கள் என்பதற்க்கு ஆதராமான வசனத்தை கூறவும்( 1- 20 வரை)
*ஸக்கரியா* (அலை) அவர்கள்
என் இறைவனே! என் மனைவி மலடியாக இருக்கிறாள்; *நானும் முதுமையின் எல்லையை அடைந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்*? என்று அவர் கேட்டார்.(19:8)
*மர்யம்* ( அலை) அவர்கள்
எனக்கு எப்படி குழந்தை உண்டாக முடியும்? *எந்த ஆணும் என்னைத் தீண்டியதில்லை; நான் நடத்தை கெட்டவளாகவும் இல்லை* என்று (மர்யம்) கூறினார்.(19:20)
4 ) *பிரசவ வேதனையில் மர்யம்(அலை)அவர்கள் எங்கு வந்து நின்றார்கள்?*
*பேரிச்சை மரத்தின் அடியில்* ( 19:23)
5 ) *நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், எழுப்பப்படும் நாளிலும்* …, இதே சொல்லாடல் வேறு ஒரு நபிக்கும் பயன்படுத்தபட்டுள்ளது. அந்த நபியின் பெயர் என்ன?
*யஹ்யா* (அலை) ( 19:15)
*ஈசா* (அலை) (19:33)
6 ) *குழந்தை பருவத்திலே வஹி செய்தியோடு தொடர்புடைய நபிமார்கள் யார்?*
*யஹ்யா* (அலை) (19:12)
*ஈசா* (அலை) ( 19:29)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*