அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 156* ||
அத்தியாயம் *17 [ஸுரா பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) வசனம் 31- 60 வரை]*
1 ) *வாக்குறுதியின் முக்கியத்துவத்தையும்*,
அழகிய நடைமுறையையும் விவரிக்கவும்?
*வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்* (17:34) என்பது மனிதர்களிடையே நம்பிக்கையைப் பேணுவதற்கும், பொறுப்புணர்வை உணர்த்துவதற்கும் அவசியமானது.
அழகிய நடைமுறை:
*“நிறைவாக அளந்து, சரியான தராசினால் நிறுத்துக் கொடுங்கள்! இதுவே சிறந்ததும், அழகிய நடைமுறையுமாகும்*” (17:35) என்பது நேர்மையையும் நீதியையும் வலியுறுத்துகிறது.
2 ) நபி(ஸல்) அவர்களிடம் *இளைஞரான தோழர் எந்த செயலுக்கு அனுமதி கேட்டார்?* அவருக்கு நபி(ஸல்) அவர்களின் *உவமையாக சுட்டிக்காட்டிய உறவுகள் யார் யார்*? அந்த இளைஞருக்காக நபி(ஸல்) என்ன துஆ செய்தார்கள்?
நபி (ஸல்) அவர்களிடம் இளைஞர் *விபச்சாரம் செய்ய* அனுமதி கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் உவமையாக சுட்டிக்காட்டிய உறவுகள்:
*தாய்*,
*மகள்*,
*சகோதரி*,
*மாமி*,
*தாயின் சகோதரி.*
நபி (ஸல்) அவர்கள் துஆ:
*“அல்லாஹ்வே! இவரின் பாவத்தை மன்னிப்பாயாக! இவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக. இவருடைய கற்புநெறியைப் பாதுகாப்பாயாக*!
(அஹ்மத் 21285)
3 ) *அல்லாஹ் யாருக்கு மத்தியில் திரையை* ஏற்படுத்துகிறான்? அந்த திரை *எதனையெல்லாம் தடை செய்யும்* என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ், *நபிக்கும் (நபி முஹம்மது (ஸல்)) மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையே திரையை* ஏற்படுத்துகிறான் (17:45).
இது அவர்களின் *உள்ளங்களில் திரைகளையும், காதுகளில் செவிடையும்* ஏற்படுத்தி, குர்ஆனை விளங்க முடியாமல் தடுக்கிறது (17:46).
4 ) *ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் எதற்காக போட்டி போடுவார்கள்*?
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால், அவர்கள் *அர்ஷுக்குரியவனை (அல்லாஹ்வை) மிகைப்பதற்காக ஒரு பாதையைத் தேடி போட்டி போடுவார்கள்* (17:42).
5 ) நபி *தாவூத்* (அலை) அவர்களுக்கு *வழங்கப்பட்ட வேதம்* எது?
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு *எந்த இரு வேதங்களை ஓதுவது எளிதாக* இருந்தது?
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் *ஸபூர்* ஆகும் (17:55).
அவருக்கு *தவ்ராத்* மற்றும் *ஸபூர்* ஆகிய இரு வேதங்களை ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது (புகாரி 3417, அஹ்மத் 7813).
6) *நல்லடியார் எவ்வாறு பேச வேண்டும்*? *நல்லடியார்களின் எதிரி யார்*?
*நல்லடியார் நல்லதையே பேச வேண்டும்* (17:53).
நல்லடியார்களின் எதிரி *ஷைத்தான்* ஆவான், அவன் *மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக* இருக்கிறான் (17:53).
7) இணைவைப்போர் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுகிறார்களே, “*அந்த அல்லாஹ் அல்லாதோர் யார்*”?
இணைவைப்போர் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுகிறார்கள்; அவர்கள் *ஜின்கள்* ஆவர். இவர்களை மக்கள் வழிபட்டனர், ஆனால் *ஜின்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகும் மனிதர்கள் வழிபாட்டைத் தொடர்ந்தனர்* (17:57,
புகாரி 4714, முஸ்லிம் 5766).
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*