அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 153* ||

அத்தியாயம் 16

[ஸுரா *அந் நஹ்ல் -தேனீ* ) வசனம் 81- 110 வரை]

1) *நபி(ஸல்)அவர்கள்  மறுமையில்   யாருக்கு சாட்சியாக்கப்படுவார்கள்*?

நபி(ஸல்) அவர்கள் *தமது உம்மத்தினருக்கு* (சமுதாயத்தினருக்கு) சாட்சியாக்கப்படுவார்கள் (16:89)

2) *அல்லாஹ்வின் ஆணை என்ன*? *அல்லாஹ்வின்    அறிவுரை என்ன*?

அல்லாஹ்வின் ஆணை:

*நீதி செலுத்த வேண்டும்

நன்மை செய்ய வேண்டும் உறவினர்களுக்கு வழங்க (உதவுதல்) வேண்டும்* என அல்லாஹ் ஆணையிடுகிறான்.

அல்லாஹ்வின்  தடுத்தல் அறிவுரைகள்:

*மானக் கேடானவை,*

*தீமை*,

*வரம்பு மீறுதல்*

ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (16:90)

3) *அல்லாஹ்வுக்கு பணிந்து நடப்பதற்காக* அவனது அருட்கொடைகள் என்ன என்ன???

அல்லாஹ்வின் படைப்பின் மூலம் *நிழல்கள் ஓர் அருட்கொடை*

*மலைகளில் மறைவிடங்கள் (குகைகள்) ஓர் அருட்கொடை*

*வெப்பத்திலிருந்து பாதுகாக்கும்  (பருத்தியிலான )ஆடைகள் ஓர் அருட்கொடை*

*போரில் பாதுகாக்கும் (கவச)உடைகள் ஓர் அருட்கொடை* (16:81)

4) இணை வைத்தவர்களை பார்த்து “*பொய்யர்கள்*” என யார் கூறுவார்கள்?

இணைவைத்தவர்களின் கடவுள்களே* அவர்களைப் பார்த்து “*பொய்யர்கள்*” என்று கூறுவார்கள்  (16:86)

5)  *யாருக்கு நல்வாழ்வு உண்டு*? அதில் *ஆண்,பெண் பாகுபாடு உண்டா*? என விளக்கவும்

இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டு நல்லறம் செய்யும் *இரு சாரார்க்கும் ( ஆண் பெண்) நல்வாழ்வு உண்டு* இதில் பாகுபாடு இல்லை (16:97)

6)  *எதனை அற்ப விலைக்கு விற்காதீர்கள்* என அல்லாஹ் கூறுகிறான்?

*அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை* அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்!  (16:95)

7) *நூலை நன்றாக நூற்று பிரிப்பது* என்கிற உதாரணத்தை அல்லாஹ் எதற்காக கூறுகிறான்?

*பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்திற்காக, சிறுபான்மை  அல்லது நலிவுற்ற சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்த சத்தியங்களை ஏமாற்றுவதற்க்காக* பயன்படுத்துவதை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்(16:92)            

8) *உள்ளத்தால் ஈமானில் உறுதியாக இருந்து சூழ்நிலை காரணமாக நாவால் குfப்ரான அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வாக்கியங்களை கூறலாமா*?

ஆம், *உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருந்தால், நிர்பந்தத்தில் கூறலாம்*.
(16:106)

9 ) *யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்*?

*அல்லாஹ்வின் வசனங்கள்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்* (16:104)

*மறுமையைவிட இவ்வுலக வாழ்வை நேசிப்பவர்களுக்கு* அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (16:107)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *