அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 142* ||
அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 21-30 வரை
1) *கலிமத் தையிபாத்* – க்கு எதை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்?
*நல்ல மரம்*
அது ஒரு நல்ல மரத்தைப் போன்றது. *அதன் வேர் உறுதியானது; அதன் கிளையோ வானளவில் உள்ளது*.
தன் இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு காலத்திலும் தனது கனியைத் தருகிறது. (14:24,25)
2) *மண்ணறையில் என்ன கேட்கப்படும்*?
உறுதியான (ஏகத்துவக்) கொள்கையைக் கொண்டு *இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்* என்ற (14:27) வசனம் தொடர்பாக நபிகளார் விளக்கும் போது, கப்ரில் அவனிடம், *உன் இறைவன் யார்? உன் மார்க்கம் என்ன? உன் நபி யார்?’ என்று கேட்கப்படுவதாகும்* என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி), நூல்கள்: திர்மிதீ (3045), நஸாயீ (2030)
3) *என்னை பழிக்காதீர்கள் , உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்* என யார் யாரை பார்த்து கூறுவார்கள்?
*தீர்ப்புநாளில் சைத்தான் இணைவைப்பாளர்களை பார்த்து கூறுவான்* ( 14:22)
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*