அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 131* ||

அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 61- 70 வரை.]

1) 12:64 ல் யாகூப் நபி *கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்* எனக்கூறுவார், இதே போல் *இதற்க்கு முன்* நாம் பார்த்த அத்தியாயத்தில் ஒரு நபி இயலாதா நிலையில் பிரார்த்திப்பார் அந்த நபியின் பெயர் என்ன?

*மூஸா நபி* ( 7:151)

கூடுதல் தகவலாக: கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்” ( أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ – அர்ஹமுர் ராஹிமீன் ) என்ற சொல் குர்ஆனில் நான்கு  இடத்தில் வருகிறது.

அவை நபிமார்கள் பயன்படுத்தியவை  *மூஸா நபி* (7:153) , *யாகூப்  நபி* ( 12:64) , *யூஸுப் நபி* ( 12:93), *அய்யூப் நபி* (21:83).

*பிராத்தனை செய்யும் போது*  நபி(ஸல்) பொதுவான வழிமுறை, *முதலில்  அல்லாஹ்வை புகழ்வது அடுத்தாக அவனிடம் பாவமன்னிப்பு தேடுவது* மூன்றாவதாக தேவைகளை கேட்பது ஆகும்

2) *யார் மீது தவக்கல்(  َتَوَكَّلِ )வைக்க வேண்டும்மென* யகூப் நபி கூறினார்?

*அல்லஹ்வின் மீதே நம்பிக்கை(தவக்கல்) வைக்கவேண்டும்* (12:67)

3) *எந்த அளவு ( كَيْلَ – கிலோ – kilo) கூடுதலாக வாங்கி வருவதாக* தன் தந்தையிடம் கூறினர்கள்?

*ஒட்டகச் சுமை அளவு* (12:65)

கூடுதல் தகவல்: ஆங்கிலத்தில் நிறுவை அளவுக்கு பயன்படுத்தபடும் கிலோ என்ற சொல் அரபு மொழியில் இருந்தே எடுத்தாக தெரிகிறது. அரபியில் நிறுவை அளவை கிலோ –  كَيْلَ என்றே வருகிறது . குர்ஆனில் இந்த வசனத்தில் இதே சொல்தான் பயன்படுத்தபட்டுளது.

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا* @Ajman Sathik bai

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *