அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 123* ||
அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 101- 110 வரை.
1)அல்லாஹ் வானவர்க்கு பிறப்பிக்கப்படுகின்ற நான்கு ஆணைகள் என்ன?
1 ) *செயல்பாடு* (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பது).
2 ) *வாழ்வாதாரம்* (அவனுக்கு என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பது).
3 ) *வாழ்நாள்* (அவன் எவ்வளவு நாள் வாழ்வான், எப்போது இறப்பான் என்பது).
4 ) *நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா என்று எழுதுமாறு அந்த வானவருக்குச் சொல்லப்படுகிறது*.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள்: புகாரி (3208), முஸ்லிம் (5145)
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்,) *அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார், நரகவாசிகள் யார் என்பது (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?* என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், *ஆம் (தெரியும்)” என்று சொன்னார்கள். *”அவ்வாறாயின், ஏன் நற்செயல் புரிபவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?”* என்று வினவப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், *(நீங்கள் செயல்படுங்கள்) ஒவ்வொருவரும் எ(தை அடை)வதற்காகப் படைக்கப்பட்டுள்ளார்களோ அது எளிதாக்கப்படும்* என்று சொன்னார்கள்.
( இதன் தொடர்ச்சியாக இன்னும் சில ஹதிஸ்கள் முஸ்லிம்: 5146, 5147.., விதி சமந்தமாகவும் உள்ளது, நேரம் கிடைக்கும் போது படித்து தெரிந்து கொள்ளவும்)
________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*