அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 116* ||
*அத்தியாயம் 11 [ஹூது (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 31- 40 வரை]
1) *நபி நூஹ் (அலை) அவர்களோடு இறை நம்பிக்கை கொண்ட மக்களை காப்பாற்ற* அல்லாஹ் செய்த ஏற்பாடு என்ன?
(11:37) “*நமது கண்களுக்கு முன்பாகவும், நமது அறிவிப்பின்படியும் கப்பலைக் கட்டுவீராக*! அநியாயக்காரர்கள் தொடர்பாக என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்!”
விளக்கம்:
அல்லாஹ், நபி நூஹ் (அலை) அவர்களுக்கு *ஒரு பெரிய கப்பலைக் கட்டுமாறு உத்தரவிட்டான்*. கப்பலில் ஒவ்வொரு உயிரினத்தின் ஆண் மற்றும் பெண் ஜோடிகளையும், இறைநம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றுமாறு கூறினான். இதன் மூலம், வெள்ளத்திலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
2) தூதர்களின் *நல்லுபதேசம் ஏன் இறை மறுப்பாளர்களுக்கு பலன் தரவில்லை*?
(11:34) *நான் உங்களுக்கு அறிவுரை கூற விரும்பினாலும், உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடி விட்டால் எனது அறிவுரை உங்களுக்குப் பயனளிக்காது*. அவன்தான் உங்கள் இறைவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.”
விளக்கம்:
*தூதர்கள் எவ்வளவு முயற்சித்தாலும், இறை மறுப்பாளர்கள் தங்கள் அகங்காரம் மற்றும் பிடிவாதத்தால் உண்மையை ஏற்க மறுத்தனர்*. அல்லாஹ் ஒருவரை வழிகேட்டில் விட்டுவிட்டால், எந்த அறிவுரையும் அவர்களுக்கு பயனளிக்காது.
3) *அச்சுறுத்தும் வேதனையை ஏற்படுத்த கூறிய இறை மறுப்பாளர்களை நோக்கி, நபி நூஹ் (அலை) அவர்கள்* என்ன கூறினார்கள்?
(11:33) “*அல்லாஹ் நாடினால் அதை உங்களிடம் அவன்தான் கொண்டு வருவான். நீங்கள் தப்பிப்போர் அல்ல*!”
(11:39) *“இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான தண்டனை யார்மீது இறங்கும் என்பதையும் அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.”*
விளக்கம்:
நூஹ் (அலை) அவர்கள் கூறியது:
*தண்டனை வரும் நேரத்தை தீர்மானிப்பது அல்லாஹ்வின் அதிகாரம். தாங்கள் அதை தடுக்க முடியாது*. மேலும், இறுதியில் யாருக்கு தண்டனை வரும் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.
4) *மனிதனை அநியாயக்காரர்கள் ஒருவராக ஆக்கி விடக்கூடிய செயல்கள்* எது?
(11:31) “*உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கின்றனவோ*, அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ்வே நன்கறிந்தவனாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் வழங்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அவ்வாறு கூறினால் *நான் அநியாயக்கார்களில் ஒருவனாகி விடுவேன்*.”
விளக்கம்:
மனிதனை அநியாயக்காரமாக ஆக்கும் செயல்களில் முக்கியமானவை:
• *பிறரை இழிவாக மதிப்பது*.
• *உண்மையை மறுத்து பொய்களை பரப்புவது*.
• *இறை தூதர்களின் வார்த்தைகளை கேலி செய்வது*.
• *அகங்காரம் மற்றும் பிடிவாதத்துடன் நடந்து கொள்வது*.
____________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*