அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 101* ||
அத்தியாயம் 9 [*அத்தவ்பா (பாவ மன்னிப்பு*) வசனம் 121- 129 வரை]
1) அல்லாஹ் *மனிதர்களை சோதனை செய்வதன் நோக்கம்* என்ன?
சோதனைகள் வாயிலாக மனிதனை சிந்திக்கவும், தவறிலிருந்து படிப்பினை பெற்று திருந்தி தன்னுடைய செயல்களை மறுபரிசீலனை செய்யவும், தாங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு இறைவனின் புறத்திற்கு மீட்சி பெறவதற்கு.
(அல் குர்ஆன் 9:126)
2) இறைவழியில் செய்யப்படும் செலவினங்களுக்கான பலன் என்ன?*
( 9:121) நாம் இறை வழியில் செய்யப்படும் *சிறிய, பெரிய செலவினங்களை அனைத்தை பதிவு செய்து* அதற்குரிய அழகிய கூலியை இறைவன் வழங்குவான்.
நாம் *அற்பமாக கருதக்கூடிய சிறிய நற்செயல்கள் கூட* இறைவனிடத்தில் அழகிய வெகுமதி பெற்று தரும்.
3) *حَسْبِىَ ٱللَّهُ* என்பதன் பொருள் என்ன?
(9:129) *அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்*
4) நபி முஹம்மது (ஸல்) அவர்கள் *தமது சமூகத்தின்மீது காட்டிய அன்பும் அக்கறையும்* குறித்து அல்லாஹ் எவ்வாறு விவரிக்கிறான்?*
(9:128) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்து விட்டார். *நீங்கள் துன்பப்படுவது அவருக்குக் கடினமாக* இருக்கிறது. அவர் உங்கள் (*நலன்)மீது ஆவல் கொண்டவர்*. இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் *கருணையும் அன்பும்* கொண்டவர்.
5) *இறைவசனம் கேட்கும் இறைநம்பிக்கையாளர்கள் உள்ளங்களில்* ஏற்படும் மாற்றம் என்னவாக இருக்கும்?
(9:124) இறைநம்பிக்கையாளர்கள் உள்ளங்களில் *இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது*, மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது.
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*