அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 99* ||
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 101- 110 வரை]*
1) நபி (ஸல்) அவர்கள் *ஸகாத்தைப் பெற்றபோது என்ன பிரார்த்தனை செய்தார்கள்?*
நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பெற்றபோது, *இறைவா! இந்நபரின் குடும்பத்திற்கு அருள்புரிவாயாக!* என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி 1497, முஸ்லிம் 1954)
2) *மஸ்ஜிதுன் நபவீ மற்றும் மஸ்ஜிதுல் குபா ஆகிய பள்ளிவாசல்களில் எந்த பள்ளிவாசல் இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்டது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜிதுன் நபவீயை குறிக்கும்போது, ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி, அதை பூமியில் எறிந்தார்கள். பிறகு *இதோ உங்களது இந்தப் பள்ளிவாசல்தான்* என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா,
நூல்கள் முஸ்லிம் (2701), திர்மிதீ (3024), நஸாயீ (690), அஹ்மத் (10624).
3) எவர்களை அல்லாஹ் *இருமுறை வேதனை செய்வான்?*
(9:101) *நயவஞ்சகத்தில் ஊறித் திளைத்த முனாஃபிக்குகளுக்கு.*
_________ _________ _________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*