*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 94* ||

*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 51- 60 வரை]*

1) *ஜகாத் யாருக்கு உரியவை*?

(9:60) *வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தர்மங்களை வசூலிப்போருக்கும், (இஸ்லாத்தின்பால்) உள்ளங்கள் ஈர்க்கப்படுவோருக்கும், அடிமைகளு(டைய விடுதலைக்)கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதை(யில் போரிடுவோரு)க்கும், வழிப்போக்கருக்கும் தர்மங்கள் உரியவை.*

2) *இறைமறுப்பாளர்களின் தர்மங்கள்* எதனால் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை?

(9:54) அவர்கள் *பாவம் செய்யும் கூட்ட்டத்தினராக இருப்பதாலும் , அல்லாஹ்வையும் அவனுடைய தூதரின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததும், தொழுகையில் பயபகத்தி இல்லாமல்  சோம்பேறிகளாக கடமைக்காக செய்ததும்,  அவர் செய்யும் தர்மங்களை இறை வழியில் விருப்பம் இல்லாமல் வெறுப்புடன் உண்மையான ஆர்வமில்லாமல்  செய்ததாலும்* அவர்களின் தர்மங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை

3) இதில் எந்த ஒரு வசனம் ஒரு  *முஸ்லிமுக்கு வாழ்க்கையின் சவால்களையும் / கஷடங்களையும் எதிர்கொள்ள உந்துதலாக இருக்கிறது*?

ஒரு முஸ்லிம் தமக்கு ஏற்படும் *எந்த விதமான சவால்களையும், இன்னல்களையும் தைரியமாக எதிர்கொள்ள*…

(9:51) *அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பாதுகாவலன்*. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வேண்டும்”

4) *இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வியகத்தக்க பொருட் செல்வங்களையும் மற்றும் பிள்ளைகளைக்* கொடுத்ததன் காரணம் என்ன?

(9:55) அவற்றின் மூலம் *இவ்வுலக வாழ்வில் அவர்களை வேதனை செய்யவும், இறைமறுப்பாளர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிவதையுமே* அல்லாஹ் நாடுகிறான்.

_________ _________ _________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *