*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 93* ||
*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 41- 50 வரை]*
1) *இறைமறுப்பாளர்களுக்கு எது கவலையை கொடுத்தது?*
(9:50) * நபிகளாருக்கு நன்மை ஏற்பட்டால்*, அது *இறை மறுப்பாளர்களுக்கு கவலை அளிக்கிறது*. அவர்கள் துன்பத்திற்குள் ஆழ்கின்றனர், ஏனெனில் *நபியின் வெற்றியை அவர்கள் விரும்பவில்லை*
2) எதனால் *இறை மறுப்பாளர்கள் போருக்கு புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து*, அவர்களைப் பின்தங்கச் செய்தான்?
(9:45,46) *இறை மறுப்பாளர்கள் உண்மையான இறைநம்பிக்கை இல்லாமல், குழப்பம் விளைவிக்க மட்டுமே போருக்குச் செல்ல விரும்பினர்*. இதனால் அல்லாஹ் அவர்களை பின்தங்கச் செய்தார்
3) *எவர்கள் போருக்குச் செல்லாமலிருக்க நபிடம் அனுமதி கேட்க மாட்டார்கள்*?
(9:44) *அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பும் உண்மையான ஈமானுடையவர்கள், தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் போரிடாமல் இருக்க அனுமதி கேட்க மாட்டார்கள்*
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*