*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

*அத்தியாயம் 9 [அத்தவ்பா (பாவ மன்னிப்பு) வசனம் 1- 10 வரை]*

|| *கேள்வி 89* ||

1) நபி (ஸல்) அவர்கள் *மக்காவாசிகளிடம் என்ன அறிவிப்பை* செய்யச் சொன்னார்கள்?

(9:1-3) நபி (ஸல்) அவர்கள், *இணை வைப்பவர்களிடமிருந்து அல்லாஹ்வும், தாங்களும் விலகிக் கொண்டிருப்பதாக பிரகடனம் செய்தார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நான்கு மாத கால அவகாசம்* வழங்கப்பட்டது, அதன்பின்பு அவர்கள் திருந்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

*இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நற்செய்தி*

….*இணைவைப்பவர் எவரும் இந்த ஆண்டிற்குப் பிறகு ஹஜ் செய்யக் கூடாது*;

*இறையில்லத்தை (கஅபாவை) நிர்வாணமாக எவரும் தவாஃப் செய்யக் கூடாது*” (என்பதே அந்த அறிவிப்பு.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (3177), முஸ்லிம் (2622)

*இறைநம்பிக்கையுள்ளவர் தவிர யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது*. நிர்வாணமாக (யாரும்) தவாஃப் செய்யக் கூடாது

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸாயீ (2909), அஹ்மத் (7636)

2) நபி (ஸல்) *ஹஜ்ஜத்துல் வதா எனும்  விடைபெறும் ஹஜ்ஜின்போது இணை வைப்பவர் ஹஜ் செய்தார்களா*?

(9:3) *இல்லை.* விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பே, இணைவைப்பவர்களை மக்காவில் இருந்து நீக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், *முஷ்ரிக்க்களுக்கு (இணைவைப்பவர்கள்) புனிதப் பள்ளிகளில் ஹஜ் செய்யத் தடை விதிக்கப்பட்டது*.

3) *இணைவைக்கும் மக்களுக்கு எதிராகப் போரிடுமாறு* நபி (ஸல்) அவர்கள் *எந்த நிபந்தனைக்குட்பட்டபடி* அல்லாஹ்வால் பணிக்கப்பட்டார்கள்?

நபி (ஸல்) அவர்கள் இணைவைக்கும் மக்களுக்கு எதிராக போரிடுமாறு அல்லாஹ்வால் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணிக்கப்பட்டார்கள்:

*உடன்படிக்கைகளை மீறும்போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, திருந்தாமல் இருக்கும்போது, தொழுகையை நிலைநாட்டாமல், ஜகாத்தும் வழங்காத நிலைமைகளில்*

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (25), முஸ்லிம் (36)

(9:5) அவர்கள் *பாவ மன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் அவர்களின் வழியில் விட்டுவிடுங்கள்*! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.

4) எவர்கள் செய்து கொண்டிருந்த செயல் மிகவும் கெட்டவை?

(9:9) *அல்லாஹ்வின் வசனங்களை சொற்ப விலைக்கு விற்று* இன்னும் அவனுடைய பாதையிலிருந்து மக்களை தடுத்த *இணை வைப்பவர்களின் செயல்* மிகவும் கெட்டது.

_________ _________ _________

Jazakallahu Haira جزاك اللهُ خيرًا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *